Ads 468x60px

Pages

Featured Posts

Sunday, October 14, 2012

இசைப்பேரரசர் இளையராஜா -25 Maestro Raja 25 Facts


  • டேனியல் ராமசாமி, அவரின் நாலாம் மனைவியான சின்னத்தாய் அம்மாவிற்கும் நான்கு மகன்கள்.வரதராஜன், பாஸ்கர், ராசைய்யா மற்றும் அமர்சிங்.அமர்சிங் கங்கை அமரன் ஆனார், ராசையா இளையராஜா ஆனார்.
  • சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில் சேருவதற்கு முன் டேனியல் ராசையா என்றே அழைக்கப்பட்டார்.
  • ஒரு காலத்தில் சென்னையில் சகோதரர்கள் அனைவரும் வந்து சம்பாதிக்க ஆரம்பித்த பொழுது, அனைவரும் அந்த பணத்தினை அவர்கள் அறையிலிருந்த லட்சுமி படத்தின் முன் வைப்பதை
    வழக்கமாகக் கொண்டனர்இப்பொழுது அந்தப்படம் இளையராஜாவின் 




    பூஜை அறையில் உள்ளது.
  • இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில் அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க பாவலர் பிரதர்ஸ் என்றார் இசைஞானி. இது சற்று பழையதாய் உள்ளது என்று யோசித்த இயக்குனர் திரு.பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே இளையராஜா.
  • தனது பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் புகைப்படங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் நடுவில் உள்ள தனது அன்னையின் புகைப்படத்தினை கும்பிட்டுவிட்டே தனது பணியை தொடங்குவார் இசைஞானி.
  • ஆர்மோனியம் இல்லாமல் சிந்தித்தபடியே ட்யூன் போடுவது இந்தியாவில் இசைஞானி ஒருவரால் ட்டுமே முடியும்.
  • யாருடன் பேசினாலும் கை குலுக்க மாட்டார் இசைஞானி அவர்கள்.
  • கதை, கவிதை , கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும் , தான் பிடித்த புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு
  • இவரை வாடா , போடா என்று உரிமையுடன் அழைப்பவர்கள் திரு.பாரதிராஜா, திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் திரு.ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள்.
  • சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி திரு.சங்கிலிமுருகனுக்கு கால்ஷீட் தந்தார்.சிபாரிசு செய்தவரின் பெயர் சின்னத்தாய் அம்மாள்.
  • சிறு வயதில் இருந்தே தனது இசைத்தோழனாக அவர் கருதுவது மதுரை பொன்னையா அவர்கள் செய்து தந்த அவரின் ஆர்மோனியப்பெட்டியே
  • இளையராஜா மட்டும்தான் எனக்கு போட்டி என கருதிய இசைமேதை ஒருவர்,அவரின் இசை உணர்ந்து இசைஞானி அவரின் பாதம் தொட்டு வணங்கியபோது உண்மையை உணர்ந்தார்.அந்த இசைமேதை மெல்லிசை மன்னர் உயர்திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். 
  • அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தார் ராசய்யாவின் வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் காலையிலேயே வேலைக்கு போகும்போது நான் போய் டாட்டா காட்டனும். சாயங்காலம் அவன் வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.
  • அம்மா என்றழைக்காத உயிரில்லையே , சின்னத்தாய் அவள் தங்க ராசாவே, என அவரின் அன்னைப்பாசம் பாடும் பாடல்கள் நிதர்சனத்திலும் நிதர்சனம்சின்னத்தாய் அம்மாள் இறந்தபின்பு மீளாத துயர் அடைந்த இளையராஜா அவர்கள் .என் தாயென்னும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே.என்று எழுதிப்பாடினார்.
  • எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார் இசைஞானி.
  • பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
  • ராசைய்யாவின் அமைதியும் அவரிடம் இருந்த அர்ப்பணிப்பையும் கண்டுதான் எனது மகள் ஜீவாவை அவருக்கு கட்டி வைத்தோம் என்பார் இசைஞானியின் சகோதரியான கமலாம்பாள் அவர்கள்.
  • இசையமைப்பதற்கு இசை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த ஆம்ப்ளிபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் , க்ளாசிக்கல் என இசை பயின்றார் இளையராஜா. ஆனால் அந்த ஆம்ப்ளிபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார் இசைஞானி.
  • அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது எதிர்த்த அனைவருக்கும் பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்து காட்டு என கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கு இசையமைத்து தனது திறமையை நிரூபித்தார் இளையராஜா
  • சிறுவயதில் கடலைக்காட்டுக்கு காவல் காத்தபடியே பாட்டுப்பாடுவாராம் இந்த இசைஞானி.காவலுக்கு காவலும் ஆச்சு, சங்கீதமும் சந்தோசமா ஆச்சு.
  • இளையராஜா இசையமைத்தால் தான் படம் தயாரிப்பேன் , படம் நடிப்பேன் என்பார் இயக்குனர் ராஜ்கிரண். ஒரு தருணத்தில் அவர் நடித்த படத்தில் தன்னால் இசையமைக்க முடியாத நிலையில் நீ நடிக்கனும், மத்தவங்களுக்கும் வாய்ப்பு தரலாம் என இசைஞானி கேட்டுக்கொண்ட பின்னரே ராஜ்கிரண் மற்றவர்கள் இசையமைக்கும் படத்தில் நடித்தார்.
  • இத்தனை வெற்றி பெற்ற ராஜா அவர்கள் இசையமைத்த முதல் படம் பாதியிலேயே நின்று போனது.அந்த படத்தின் தயாரிப்பாளர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
  • உங்களின் மாஸ்டர்பீஸ் என எதைக்கருதுவீர்கள் என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இசைஞானியின் பதில்கார்த்திக்,பவதாரிணி, யுவன் ஆகியோரே எனது சிறந்த மாஸ்டர்பீஸ் படைப்புகள்.
  • மிகவும் உயர்ந்த இசை இதுவரை நாம் கேட்காத இசையே ஆகும்இதுதான் இசை குறித்து இசைஞானி அவர்கள் கூறுவது.
  • கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்க தொடங்கிய இளையராஜா தான் கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார். ஒரு வித சோகத்துடன்.

    குறிப்புகள் உதவி ,  நன்றி : கிருஷ்ணா கிட்டு 


Monday, August 6, 2012

தொழில்நுட்பக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ் Steve Jobs -25 Facts


  • தொழில்நுட்ப உலகின் மாமேதை ஸ்டீவ் ஜாப்ஸ், பிறந்ததுமே அவரை ஒரு மெக்கானிக்'கிற்கு தத்துக்  கொடுத்துவிட்டனர் . அந்த வளர்ப்பு பெற்றோர்கள் வைத்த பெயர் தான் ஸ்டீவென் பால் ஜாப்ஸ் ( Steven Paul Jobs ) 
  • பள்ளிப் படிப்பின் போது இவரது சேஷ்டைகள் மிகவும் பிரபலமாவை : ஒரு முறை,  ஆசிரியை அமரும் இடத்திற்கடியில் ஒரு சிறிய வெடி குண்டை வைத்துவிட்டார். அதுவும் வெடித்து ஆசிரியைக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்ப்பட்டது.
  •  சரியாக தன் வீட்டுப் பாடத்தை செய்யாத ஸ்டீவை அவரின் ஆசிரியை லஞ்சம் கொடுத்து படிக்க வைத்தார்.தினமும் சரியாக வீட்டுப் பாடம் செய்து வந்தால் லாலிப்பாப்புகள் தரப்படும் என்று தெரிவித்ததும் சரியான நேரத்திற்கு செய்து லாலிப்பாப்புகளைத்  தட்டிச் செல்வார்.
  • "பட்டினியால் வாடும் குழந்தைகள்" என்று ஒரு நாளிதழில் வெளிவந்த கட்டுரையை பார்த்தார். உடனே அதை எடுத்துச் சென்று, தான் செல்லும் தேவாலயத்தின் தந்தையை சந்தித்தார். அங்கு அவரிடம் அந்தக் கட்டுரையைக் காட்டி, "ஆண்டவருக்கு எல்லாம் தெரியும் அல்லவா ?  இதுவெல்லாம் அவருக்குத் தெரியாதா ?? என்று கேட்டார். தந்தை அதற்கு, ஸ்டீவ் உனக்கு இது புரியவில்லை , இதெல்லாம் விதி என்றார். உடனே அப்படிப்பட்ட ஆண்டவரை நான் இனி வணங்கப் போவதில்லை என்று கூறி அதன் பின் தன் வாழ்நாளில் அந்த தேவாலயத்தின் பக்கமே செல்லவில்லை ஸ்டீவ் 
  • இளம் வயதில் தன் வளர்ப்புப் பெற்றோரின் கண்டிப்பையும் மீறி தான் காதலித்த கிரைசான் பென்னனுடன் சென்று ஒரு தனி வீட்டில் வசித்தார். அங்கு ஓவியம்  வரைவதிலும் , கவிதை எழுதுவதிலும், கிட்டார் வாசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார்.
  • பிரான்சிஸ் மூர் லேப் எழுதிய "இந்த சிறிய உலகிற்கான நல்லுணவு" என்ற நூலைப் படித்ததற்குப் பின் தீவிர சைவமாக மாறிவிட்டார் . ஆப்பிள் கேரட் மற்றும் ஸ்டார்ச் இல்லாத காய் கறிகளை மட்டுமே உணவாக உட்கொண்டார்.
  • நீம் கரோலி பாபா என்பவர் ஸ்டீவின் இந்திய குரு. ஒருமுறை ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு வேலை நிமித்தமாக இந்தியா வந்தபோது  இவரை  தரிசித்து  அவரின்
    கொள்கைகளில் ஈர்க்கப் பட்டார் .
  • பின்னாளில் தன் நிஜப் பெற்றோர்கள் தங்களது அறிவாளி மகனைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அதை மறுத்துவிட்டார் ஸ்டீவ்
  • ஆப்பிள் மூன்று (Apple-3) கணினிக்கு தன் மகளின் பெயரான லிசா என்ற பெயரையே சூட்டினார் ஸ்டீவ்.
  • ஜென் குருக்களின் மேலும் புத்த மதத்தின் மேல் பெரும் ஈர்ப்பு கொண்டவர் ஸ்டீவ். தன் திருமணத்தை கூட ஜென் துறவியின் முன்னிலையில் தான் நடத்தினார்.
  • ஒரு கடையில் குமாஸ்தாவாகவும், கார்கள் விற்ப்பவராகவும், வீடு விற்கும் நிறுவனத்தின் பிரதிநிதியாகவும் , வேலை செய்திருக்கிறார்.
  • கல்லூரியில் சில நாட்கள் படித்தார். எழுத்துக்களை வடிவமைக்கும் கேளிக்ராபி        (Caligraphy) என்கிற படிப்பையும் படித்துத் தேர்ந்தார் .
  • புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீவ் அதை இயற்கை உணவு முறையின் மூலமே குணப் படுத்திவிடலாம் என்று நம்பி இருந்தார். ஆனால் நிலைமை கைமீறி கடைசியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விட்டது . அப்போதே அவர் நீண்ட நாள் உயிரோடு இருக்க முடியாது என்கிற செய்தியை டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். அதைப் போலவே ஜாப்சும் சென்று சேர்ந்து விட்டார்.
  • வளர்ப்பு பெற்றோரான பாலும் க்லாரவும் தான் ஆயிரம் சதவிகிதம் தன்னுடைய நிஜப் பெற்றோர்கள் என்று ஜாப்ஸ் சொல்லிக்கொண்டே இருப்பார் (in his biography he writes Paul and Clara Jobs “were my parents 1,000%.”)
  • சைவ உணவுகளை உண்பதற்காகவும், பிராணிகளின் மீதான காதலுக்காகவும் பீட்டா (PETA, People for Ethical Treatment of Animals ) அமைப்பு ஜாப்சை பாராட்டியது
  • சிறு வயதில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஹரே கிருஷ்ணா கோவிலில் கொடுக்கப் படும் நல்ல உணவினை சாப்பிடுவதற்காக வெகு தூரம் நடந்தே செல்வார். வறுமையின் பிடியில் இருந்த போது கொக்கக்கோலா புட்டிகளை சேகரித்துக் கொண்டு போய் கடைகளில் கொடுத்தது அதன் மூலம் கிடைக்கிற பணத்தை சேமிப்பார்.
  • எல்.எஸ்.டி.( LSD , (d-lysergic acid diethylamide which is a mood-changing chemical) என்கிற,மனநிலையை மாற்றக் கூடிய வேதிப்பொருளை உபயோகித்ததை, தான் செய்த நல்ல காரியங்களுள் ஒன்று எனத் தெயவித்தார் ஜாப்ஸ்.                                           
  • எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஜாப்ஸ் ஹெவ்லெட் பேக்கட் (HP) நிறுவனத்தின் பகுதி நேர ஊழியராக சேர்ந்தார். அதன் வாசலில் போய் நின்று கொண்டு அவரை உள்ளே அனுமதிக்குமாறு நிர்பந்தித்தார். அதன் காவலாளி அவரை அனுமதிக்கவில்லை.சடசடவென உள்ளே நுழைந்த ஜாப்ஸ் அடார்நியிடம் சென்று தனக்கு வேலை கொடுக்கவில்லை என்றால் தான் அந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை எனத் தெரிவித்தார்.அதன் படியே தன புத்திசாலித் தனத்திற்காக வேலை வாங்கிக் காட்டினார் ஜாப்ஸ்.
  • ஆப்பிள் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்னும் ஆரம்பித்த பின்னும் சரி , ஜாப்ஸ் சரியாக குளிக்கவோ தன்னை சுத்தமாகவோ வைத்துக் கொள்ள மாட்டார் என்று எல்லோரும் அவரை திட்டித் தீர்ப்பார்கள். ஜாப்ஸ் என்றுமே எவரையுமே கண்டு கொண்டதில்லை.
  • ஊதா நிற ஜீன்சும், கருப்பு நிற சட்டையும் அணிவதில் அலாதியான சுகம் ஜாப்சுக்கு.
  • பெப்சியின் தலைமை அதிகாரியை ஆப்பிள் நிறுவனத்திற்காக வேலை செய்ய அழைத்துக் கொண்டார். மேலும் " நீ வாழ்நாள் முழுதும் சர்க்கரை கலந்த கலர் தண்ணீரையே விற்றுக் கொண்டிருக்க விரும்புகிறாயா அல்லது மக்களின் வாழ்க்கைக்கு உபயோகமானவைகளை விற்க விரும்புகிறாயா?" என்று அவரைப் பார்த்து கேட்டார் ஜாப்ஸ்.
  • அவருடைய டிஸ்னி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு $48 மில்லியன் டாலர். ஆனால் தன்னுடைய ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருப்பதற்காக தான் பெற்றுக் கொண்ட சம்பளம் ஒரே ஒரு டாலர் மட்டும் !
  • தற்போதைய நிலவரப் படி உலகின் 136'வது பணக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ்
  • ஆப்பிள் உயர் ரக தொலைபேசி வெளியீட்டின் போதும் சரி , சிறுவயதில் தான் ப்ளூ பாக்ஸ் என்கிற கருவியை கண்டு பிடித்த போதும் சரி . விளையாட்டாக யாருக்காவது அலைபேசியில் அழைத்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஜாப்ஸ். (உ.தா., ஒருமுறை பக்கத்து நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு அழைப்பு விடுத்து ஏமாற்றினாராம் )
  • தன் பன்னிரெண்டாவது வயதில் கணினியை கண்டுபிடித்த மாமேதை , ஐ-பேட், மேக் கணினி , ஆப்பிள் தொலைபேசி, போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகளின் தந்தையாகவும் விளங்கிய இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதனை தத்துக் கொடுத்தமைக்கு அவரின் நிஜப் பெற்றோர்கள் எத்தனை நாள் கண்ணீர் விட்டழுதிருப்பார்களோ என்னவோ , உலகம் இவரைப் பிரிந்த போது சக போட்டியாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. எல்லா முன்னணி நிறுவன முதன்மை செயலாளர்களும் ஜாப்ஸின் மரணத்திற்குப் பின் அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.










     

Wednesday, July 11, 2012

சிரிப்புச் சக்கரவர்த்தி சாப்ளின் -15


  • சார்லஸ் ஸ்பென்செர்ஸ் சாப்ளின்  16 ஏப்ரல் 1889 அன்று  லண்டனில் இருக்கும் வால்வோர்த்'தில் பிறந்தார் .இவர் பிறந்ததற்கு நான்கு நாட்களுக்குப் பின் பிறந்தவர் தான் ஹிட்லர்.
  • டைம்ஸ் நாளிதழில் முதன் முதலாக தோன்றிய நடிகர் சார்லி சாப்ளின் தான் (ஆண்டு 1925)
  • ஒருமுறை ,சார்லி சாப்ளினைப் போலவே உருவம் கொண்டவர் யார் என்று  நடந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டு  மூன்றாம் இடம் பிடித்தார் சாப்ளின் . முதல் இடம் பிடித்தவர் ஹிட்லர்.
  •  சாப்ளினின் புகழை அறிந்து , அவரைப் போலவே மீசையை வைத்து தன்னை நல்லவர் போல காட்டிக் கொண்டவர் தான் ஹிட்லர் .
  • சாப்ளினின் இறந்த உடல் திருடு போனது..  ஆண்டுகள் கழித்து அதை கண்டுபிடித்ததும் மீண்டும் அவரை சிமெண்டு அறையில் அடக்கம் செய்தனர்.
  • நான்கு முறை திருமணம் செய்தவர் சாப்ளின் 1942இல் நான்காவது மனைவியாக ஒ.நெயில் அமைந்த பின் தான் சற்று தொல்லைகள் இல்லாமல் இருந்ததாகத் தெரிவித்தார்.
  •  குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சலூன்,கண்ணாடித் தொழிற்சாலை , மருத்துவமனை போன்ற இடங்களில் சிறுவயதிலேயே வேலை செய்தார் சாப்ளின்
  • சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்தார். தந்தை இறந்துவிடவே அதைத் தொடர்வதை நிறுத்திவிட்டார் சாப்ளின்.
  • அமெரிக்க அரசு ,சாப்ளினை ஒரு கம்யுனிஸ்ட் தீவிரவாதி என்று சாடியது.எனவே கனத்த இதயத்துடன் ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் ஆனார்.
  • அதே அமெரிக்க அரசு 1972ஆம் ஆண்டு சாப்ளினை அழைத்து அவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருதையும் அளித்தது . காலம் சாப்ளினுக்குத் தந்த அட்டகாசமான பரிசும், அமெரிக்காவுக்கு இட்ட சூடும் இதுவே.
  • 500க்கும் மேற்பட்ட மெலடிக்களை தானே உருவாக்கியவர் சாப்ளின் 
  • சாப்ளின் கடைசியாகப் பார்த்த திரைப்படம் ஸ்டாலோனின் ராக்கி   
  •  முதல் திருமணத்தின் போது சாப்ளினுக்கு வயது 29 . அவரது மனைவிக்கு வயது 19. இரண்டாவது திருமணத்தின் போது சாப்ளினுக்கு 35, மனைவிக்கு 16.மூன்றாவது திருமணத்தின் போது இவருக்கு 47 வயது , 3 வது மனைவிக்கு 47.நான்காவது திருமணத்தின் போது சாப்ளினுக்கு வயது 54 வயது. நான்காவது  மனைவி ஒ.நெய்ல்'க்கு  வயது 18.
  • ஒரு முறை லண்டனுக்கு வந்த போது , இரண்டே நாட்களில் 73000'த்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் இவருக்கு வந்ததாம்.
  • "அந்த கிரிக்கெட் தொப்பியும் , நடை குச்சியும் கொண்டு  நடிக்கிற மனிதர் மட்டும் இல்லையெனில் எனக்கு நகைச்சுவை என்றால் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும்" என்று சாப்ளினைப் புகழ்ந்தார் ஆஸ்கார் வில்டே
     

Wednesday, June 20, 2012

பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - SPB 25



  • களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி-யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று. பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பி-யின் பெர்சனல் பக்கங்கள்…
  • பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொணேட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்!
  • முதன்முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது ‘சாந்தி நிலையம்’ படத்துக்காக ‘இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது ‘அடிமைப் பெண்’ படப் பாடலான ‘ஆயிரம் நிலவே வா’!
  • பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ‘கேளடி கண்மணி’, ‘காதலன்’ இரண்டும் இன்றும் நினைவில் நிற்பவை!
  •  எஸ்.பி.பி. இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். ‘சங்கராபரணம்’, ‘ருத்ர வீணா’, ‘ஏக் துஜே கேலியே’, ‘மின்சாரக் கனவு’ என இவர் பாடியதெல்லாம் ஒலிபரப்பாகாத நாளே இல்லை!
  • ‘ஏக் துஜே கேலியே’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர். இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு!
  • இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் ‘வாடா, போடா’ எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்கவைக்கும்!
  •  சுத்தமான சைவ உணவுப் பழக்கம். இவ்வளவு பெரிய ஆகிருதிகொண்ட இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்… இஷ்ட உணவு!
  • இதுவரை 42,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்!
  • எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்! 
  • மூச்சுவிடாமல், ‘கேளடி கண்மணி’யில் ‘மண்ணில் இந்தக் காதல்’, ‘அமர்க்களம்’ பட ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்! 
  • எஸ்.பி.பி-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி, ஜேசுதாஸ். முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார். ‘டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்தப் பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது’ எனப் பாராட்டி மகிழ்வார்!
  • எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல் ‘ஆயிரம் நிலவே வா’. அந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி. அழைக்கப்பட்டபோது, குளிர் காய்ச்சலில் இருந்தார். ‘ரெஸ்ட் எடு. நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர். பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய். மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு!’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்!
  • கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பி-யின் தணியாத தாகம்.!
  • பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், ‘ராஜா… ராஜாதான்’ என்கிற கட்சி!
  • ‘மழை’ படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலைப் பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்குள் அடியெடுத்துவைத்து, பாடி, வெளியேறியது எல்லாம் 12 நிமிடங்களில் முடிந்துவிட்டது!
  • கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி. இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, சச்சின் தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்!
  • ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்! அவர் இசையமைத்து, நடித்த படம் ‘சிகரம்’.
  • பிறந்த தினம் ஜூன் 4, 1946. இன்றும் பிஸியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை! 
  • ‘முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!
  • சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை. ஏனோ, இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம். சினிமாவையும் வீட்டையும் தள்ளித் தள்ளியே வைத்திருக்க விரும்புவார் 
  • எஸ்.பி.பி. பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழி கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்!
  • எஸ்.பி.பி-யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு, இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு!
  • தெலுங்குப் படங்களில் நிறைய ‘ராப்’ பாடல்கள் எழுதியவர். ‘கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு’ என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!
  • கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்!