Vijay in Joy Alukkas Advt |
Vijay in Velayutham Song |
Vijay With his Elder son Sanjay in a song performance |
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின் எதார்த்தமான நடிப்பினால் தமிழ்நாட்டை கட்டிப் போட்டிருக்கும் பெருமை நம் இளையதளபதியை சாரும் . குழந்தைகள் , இளைஞர்கள் , பெண்கள் என இவரின் ரசிகர் பட்டாளம் நீள்கிறது. இவரின் ரசிகராக இருப்பவர்கள் எந்நேரமும் உத்வேகத்துடனும் , புத்துணர்வுடனும் இருக்கிறார்கள். இனி விஜயைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
- விஜய்க்கு , வித்யா என்றொரு தங்கை இருந்தார் , அவர் ஐந்து வயதிலேயே ரத்தப் புற்றுநோயால் உயிரிழந்தார் . கடந்த 16 ஆண்டுகளாக தன் தங்கையின் நினைவு தினத்தில் நிறைய ஏழை புற்றுநோய் நோயாளிகளின் மருத்துவ செலவுகளை தானே ஏற்று செய்து கொண்டு வருகிறார் விஜய். இந்த மனித நேயம் தான் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.
- இவரின் தந்தை எஸ்.எ.சந்திரசேகர் 1974 ஆம் ஆண்டில் விஜய்க்கு பால் வாங்கக் கூட காசில்லாதவராக இருந்திருக்கிறார் . பின்னர் 1976 இல் இணை இயக்குனர் வாய்ப்பு பெற்றார். விஜய் பிறந்ததும் தான் , தான் ஒரு நல்ல நிலையை எட்டியதாக இன்றும் பெட்டிகளில் தெரிவிப்பார் SAC
- விஜயின் பேவரிட் டிஷ் - தோசை. தனக்குப் பசிக்கும் போது ஒவ்வொரு முறையும் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் தானே சமையல் அறைக்குள் நுழைந்து தோசை வார்த்துச் சாப்பிடுவார்.
- விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர், ஒரு தேர்ந்த பாடகி . விஜயும் ஷோபா அம்மாவும் இனைந்து ஒன்ஸ்மோர் திரைப்படத்திற்காக பாடிய பாடலை இன்றும் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என தெரிவிக்கிறார் நினைவு கூர்கிறார்.
- திரைக்கதையில் உண்டான சிறு கருத்து வேறுபாட்டினால் விகரமினின் உன்னை நினைத்து படத்தில் இருந்து விலகினார். பின்னர் அதே லக்ஷ்மி பிலிம் சர்கியுட்டுகாக அதற்கு பதிலாக பகவதி படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜய் . பின்னாளில் ஒரு விழாவில் இருவரும் சந்தித்து நட்பு பாராட்டிக் கொண்டனர். விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரே ஒரு சின்னப் பிரச்சனை இது மட்டும் தான் . மற்றபடி விஜய் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட்.
- விஜயின் தான் நடித்த 53 படங்களிலும் பாசிடிவ் கிளைமாக்ஸ் வரும்படி தான் நடித்திருக்கிறார் . எந்தப் படத்திலும் கதாநாயகன் இறந்துவிட மாட்டார் ( பிரியமுடன் தவிற ). வேறு எந்த ஒரு நடிகரிடமும் இல்லாத சிறப்பம்சம் இது.
- அட்டகாசமான நடனத்திற்கு பெயர் போனவர் விஜய் என்பது நாடறிந்த செய்தி . அப்படி கடினமான பாடல்களுக்கு ஆடிவிட்டு வீட்டிற்கு வந்ததும் வெறும் தரையில் படுத்து உறங்கிவிடுவார். வெறும் தரையில் படுப்பதென்றால் அவ்வளவு இஷ்டம் அவருக்கு .
- ரஜினி கமலுக்குப் பின் இளையராஜாவின் இசையில் பாடியது விஜய் தான்.காதலுக்கு மரியாதை படத்திற்காக ஒ பேபி பாடலுக்காக குரல் கொடுத்தார்.
- புரட்சி தலைவரின் தீவிர விசிறியான விஜய் . அவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை எண்ணமுடியாத தடவை பார்த்திருப்பதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் படங்களின் டி.வி.டி.க்களின் தொகுப்பையே வைத்திருக்கிறார் விஜய். மேலும் எல்லா பேட்டிகளிலும் தன் வழிகாட்டி தலைவர் எம்.ஜி.ஆர்.என்றே தெரிவிப்பார் விஜய்
- படங்களில் புகைப்பதற்காகவே சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டார் விஜய் . பெரும்பாலும் தன் இயக்குனர்களிடம் புகைப் பிடிக்கும் சீன்களை வைக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவார். நிஜ வாழ்க்கையிலோ , படங்களிலோ புகைப் பிடிப்பது விஜய்க்குப் பிடிக்காத ஒன்று
- விஜயின் அப்பாவிற்கு ஜக்கி வாசுதேவின் கொள்கைகள் பிடித்துப் போய் விஜயையும் யோகா கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் விஜய் அதை மறுத்துவிட்டார்.
- விஜய் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இல்லை. ஒவ்வொரு dec 25 கிறிஸ்மசுக்கும் தன் வீட்டில் இருப்பார் .தன் குடும்பத்தினரோடு நேரம் களித்து மகிழ்வார்
- விஜய் 2010 இல் தன் ரசிகர் மன்றங்களை விஜய் ரசிகர் மன்றங்களாக மாற்றினார் . அதன் மூலம் தொடர்ந்து அவரது ரசிகர்களும் அவரும் மக்கள் சேவை , பொதுப்பணி , ஏழை மாணவர்கள் , மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் .
- விஜய் தன்னுடைய தொலைபேசி எண்ணை விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியப் படுத்தியிருக்கிறார். அவரின் நெட்வொர்க் ஏர்டெல். எப்போதும் தன் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்பிலேயே இருக்கிறார் விஜய்
- தன்னுடன் நடித்த கதாநாயகிகளில் மிகவும் பிடித்தவராக சிம்ரனைக் குறிப்பிடுவார் விஜய் . மேலும் அவரோடு நடனம் ஆடுவது மிகவும் சவாலானது என்றும் தெரிவிப்பார் விஜய்.
- மூன்று விளம்பரப் படங்களில் நடித்தார் விஜய் , கொக்க-கோலா, ஜே ஆலூக்காஸ் , டாட்டா டோகோமோ. இவற்றில் காக்க கோலா விளம்பரத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்த பின் தான் கத்ரீனா கைப்'க்கு பட வாய்ப்புகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
- சக நடிகர் அஜித்துடன் படங்களில் போட்டி இருந்தாலும் , நிஜ வாழ்வில் இருவரும் சிறந்த நண்பர்கள் , இருவர் வீட்டிற்க்கும் இருவரும் போய் வருவது வழக்கம் .மேலும் இவரின் பிள்ளைகள் ஒரே பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. "தல-தளபதி" என்கிற தாரக மந்திரமான நட்பிற்கு சொந்தக்காரர்கள் - அஜித்தும் விஜயும்
- ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்தும் விஜயும் சேர்ந்து நடித்திருப்பார்கள் . நட்பிற்கு சிறந்த உதாரணமாய் புகழப் பட்டது அந்தப் படம்
- தான் பாடிய 25 பாடல்களில் மூன்று பாடல்கள் சூர்யாவிர்காக பாடியிருக்கிறார் விஜய் . ஒரு பாடல் நடிகர் விக்னேஷிர்காக . மற்ற நடிகர்களுக்காக பாட வரும் அழைப்பினை விஜய் ஒரு போதும் மறுப்பதில்லை.
- இவ்வளவு பெரிய நடிகரான பின்பும் தன் கல்லூரி நண்பர்களை மறக்காமல் இருக்கிறார் விஜய் . தன் படங்களான பத்ரி , நிலாவே வா , மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் அவரோடு இருக்கும் அனைத்து நண்பர்களும் விஜயின் கல்லூரி நண்பர்கள். அவர்கள் அனைவருக்கும் உதவியது விஜய் , இன்று அவர்கள் அத்தனை பெரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
- விஜயின் மாமா எஸ்.என்.சுரேந்தர் தான் மைக் மோகனுக்காக நிறைய படங்களில் பின்னணிக்குரல் கொடுத்தவர் .
- விஜயை பாடகராக அறிமுகப் படுத்தியது தேனிசைத் தென்றல் தேவா. விஜயின் பதினைந்து படங்களில் தேவாவின் இசை தென்றலாக வருடியிருக்கிறது . எப்படியும் விஜயை ஒரு பாடலாவது பாட வைத்து விடுவார் தேவா . அவரின் விசிறி என்றே சொல்லலாம் .
- விஜய் தானே புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக தன் மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகள் செய்தார். மேலும் ஹோசூரில் ஒரு இலவச பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் விஜய் . இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 32 ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவை தானே ஏற்று செய்து கொண்டிருக்கிறார் விஜய். இதை அவர் வெளியிலும் சொல்லி கொண்டதே இல்லை
- இலங்கை தமிழரான தன் மனைவி சங்கீதாவின் வருகைக்க்ப் பின் விஜய் நடித்த ஐந்து படங்களும் பெரிய ஹிட்டானது .சங்கீதாவின் வரவை தன்வாழ்க்கையில் கிடைத்த அதிர்ஷ்டம் என்றே ஒவ்வொரு பேட்டியிலும் தெரிவிப்பார் விஜய் .
Vijay in Velayutham Movie |
0 comments:
Post a Comment