Pages

Tuesday, April 10, 2012

கமல் என்கிற மாமனிதர்

  • நடிகர் , தயாரிப்பாளர் , திரைக்கதை எழுத்தாளர்  ,  இயக்குனர் , பின்னணிப் பாடகர்,  வசனகர்த்தா , நடன இயக்குனர் , எழுத்தாளர், கவிஞர் , சண்டை , பாடலாசிரியர் , மேக்கப் ,  என சினிமா துறையின் அனைத்து துறைகளிலும் ஜொலித்தவர் , ஜொலிக்கிறவர் , ஜொலிக்கப் போகிறவர் கமலஹாசன் மட்டுமே.
  • கமலின் தந்தை தன்னுடன் சிறையில் இருந்த யாக்கோப் ஹாசன் என்பவற்றின் நினைவாக கமல்ஹாசன் என்று பெயர் வைத்தார். 
  • தன்னுடைய ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய கமல் அதன் மூலம் எண்ணற்ற ஏழைக் குழந்தைகளுக்கும் , பிள்ளைகளுக்கும் உதவி வருகிறார் . மேலும் ரத்த தானம் , கண்தானம்,  உடல் தானம் , போன்றவை கமல் ரசிகர்களால் மட்டுமே மிகுந்த மனிதாபிமானத்தோடு பெருமளவில் செய்யபடுகிறது ! 
  • டோர்ரொண்டோ விமான நிலையத்தில் ஒரு முறை முஸ்லிம் பெயர் வைத்திருப்பதற்காக அனுமதி மறுக்கப் பட்டார் கமல் .
  • இந்திய சினிமாவில் இவர் ஆற்றும் பெரும் பங்கை சிறப்பித்து 1990  ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ" பட்டம் வழங்கப்பட்டது 



  •  சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் கமலுக்கு கவுரவ "டாக்டர்" பட்டம் கொடுத்து தன்னை கவுரவித்துக் கொண்டது .

  • சினிமாத் துறையில் 50  ஆண்டுகளைக் கடந்து வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்கும் கலை தாகம் தணியாத கலைஞனாய் மின்னுகிறார் கமல்.
  • என்றும் எப்போதும் எல்லோரிடத்தும் பாசமாக இருப்பவர் கமல் . நம்பியார் , நாகேஷ் , சிவாஜி , எம்.ஜி.ஆர்,ஜெமினி கணேசன் , மனோரமா, போன்றவர்களின் பேரன்பை பெற்ற ஒரே கலைஞன் கமல் .
  • தன் முதல்  படத்திற்காக தேசிய விருது வாங்கினார் - களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசன் (1959 )
  • இந்தியாவின் பிக்காசோ என்று அழைக்கப் படும் எம்.எப்.ஹுசைன் அவர்கள் , கமலின் படைப்புத் திறனைக் கண்டு வியப்பதாகத் தெரிவித்திருந்தார் .  
  • உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் புற்று நோய்க்கான விழிப்புணர்வு விளம்பரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார் 

  • கமல் நடித்த நாயகன் (1987) டைம்ஸ் பத்திரிக்கையால் மிகச் சிறந்த படைப்பென்று பாராட்டப்பட்டது
  • தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்து திரை உலகத்தின் அத்துனை நாயகர்களையும் அண்ணாந்து பார்க்க வைத்தார் கலைமாமணி கமல்ஹாசன் .
  •  அன்னை வேளாங்கன்னி என்னும் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணி செய்தார்.
  • பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்திய கமலஹாசன் சிவாஜி கணேசனின் கலை வாரிசு என்று ஏற்கப்படத் துவங்கியதற்கு பதினாறு வயதினிலே திரைப்படம் பிள்ளையார் சுழியிட்டது. 

  • உலகத் திரைப்பட வரலாறுகளிலே  முதன் முறை குள்ளத் தோற்றம் கொண்டவராக ஒரு நடிகர் நடித்திருப்பது அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக கமல்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்த படம் 1989 ஆம் ஆண்டில் 36 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
  •  
  • ஆஸ்காருக்கு பரிந்துறிக்கப் பட்ட இந்திய படங்களில் அதிகமான முறை (7 முறை) பரிந்துரைக்கப் பட்ட படங்கள் கமல்ஹாசனுடைய திரைப்படங்கள் மட்டுமே.
  • இந்திய மொழிகளுள் ஒன்பது மொழிகள் சரளமாகப் பேசக் கூடியவர். தமிழ் , தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,பெங்காலி,மற்றும் ஹிந்தி படங்களில் நடித்திருக்கும் ஒரே இந்திய நடிகர் .
  • தேவர் மகன் - இந்தியத் தேசிய திரைப்பட விருதினை 1993 ஆம் ஆண்டு பெற்ற இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
  • ஹேராம் இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது 2000பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • ஜாக்கி சானின் சண்டைகளைக் பார்த்து அதை பின்பற்ற நினைத்தேன் அதன் விளைவாக 32 முறை கை உடைந்து போனது என்று ஒரு விழாவில் ஜாக்கி முன்  சொன்னார் கமல்ஹாசன்.
  • எலிசபெத் ராணியின் சென்னை வந்த பொது மறுத்த நாயகத்தின் தொடக்க விழா நடைபெற்றது. போதுமான நிதி பற்றாக்குறையால் படம் கிடப்பில் கிடக்கிறது.கூடிய விரைவில் அதை வெற்றிப் படமாக வெளியிடுவார் கமல்.
  • இந்தியன் - 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
  • 50 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட தசாவதாரம் 276 கோடி ரூபாய் வசூலித்து மாபெறும் சாதனை படைத்தது 
  • 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குருதிப்புனல் திரைப்படம்
  • பதினெட்டு பிலிம் பேர்  விருதுகள் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல் 
  • இளையராஜாவுடன் தீராத காதலில் இருப்பவர் . இவர்கள் சேர்ந்து உருவாக்கிய இசை உலகப் புகழ் பெற்றவை 

0 comments:

Post a Comment