Pages

Friday, April 13, 2012

ஆஸ்க்கர் தமிழன் - Rahman 25

  1. ஒன்பது வயதில் தன் தந்தையை இழந்த திலிப் குமார் , கஷ்ட ஜீவனத்தில் தன் தந்தையின் இசைக் கருவிகளை விற்றார்.பின்னர் காசிம் பாயால் உதவப்பட்டு அல்லா ரக்கா ரஹ்மானாக மாறினார் AR RAHMAN 
  2. ஒரு கீபோர்டு கூட வாங்க வசதி இல்லாமல் இருந்தஅதே ரஹ்மான் தான் பின்னர் இந்தியாவிற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் கொடுத்தார் . வாழ்க்கை, மனிதர்களை புழுதியில் கிடத்தினாலும் மன உறுதி படைத்தவர்கள் இயற்கைக்கே சவால் விட்டு எழுந்து நிற்பார்கள் . ரஹ்மானும் தன் விதிக்கு சவால்விட்டு வென்ற மனிதர்.
  3. தன் இளம் வயது இசை நாட்களை எம்.எஸ்.வி, இளையராஜா, குன்னக்குடி, ஜாகிர் உசேன் , போன்ற இசை மாமேதைகளுடன்  முதலீடு செய்தார் .பின்னாளில் அதற்கான புகழ் மகசூளையும் அறுவடை செய்தார்
  4. எண்ணிலடங்கா விருதுகளுக்குச் சொந்தக்காரர் ரஹ்மான் . 103   விருதுகளைப் குவித்திருக்கிறார் அதில் இரண்டு ஆஸ்கர்களும் , நான்கு தேசிய விருதுகளும்   , இருபத்தி எட்டு பிலிம் பேர்களும் அடக்கம்
  5. பிரபல ஆஸ்திரேலிய இயக்குனர் இப்படித் தெரிவித்ததார் :                                ரஹ்மான் தொடாத இசை நுணுக்கமே இல்லை , அவரின் இசையில் மனிதநேயமும், புத்துணர்ச்சியும் நிறைந்திருக்கும் , எனக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் " 
  6. அவருடைய முதல் திரைப்படமான ரோஜா படத்தின் பாடல்  , டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த பத்து பாடல்களுக்குள் ஒன்றாக தரவரிசையில் இடம் பெற்றது 
  7. ரான் பேர் என்கிற இசை இயக்குனர் ரஹ்மானை இப்படித் தெரிவித்தார் : உலகில் இருக்கும் சிறந்த இசயமைப்பலர்களுள் ரஹ்மானும் ஒருவர்
  8. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாக வதந்தி கிளம்பியது.மிகவும் மனமுடைந்து போனார் ரஹ்மான்.அதே வேகத்தோடு வந்தே மாதரம் ஆல்பம் ஒன்றை தன் குரலில் பாடி தன் தேசப் பற்றை உலகத்திற்கே பறை சாற்றினார் ரஹ்மான்
  9. இசையில் ஆர்வமுள்ள 25  குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் தன் இசைப்பள்ளியின் மூலம் உதவுகிறார் ரஹ்மான் .
  10.  கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் தன் வழக்கமான இசை அமைப்பு ஸ்டைலில் இருந்து வேறுபட்டு ஒரு முழுநீள கிராமியத் திரைப்படங்களுக்கும் தன்னால் பெரும் சிறப்பு சேர்க்கமுடியும் என நிரூபித்தார் ரஹ்மான் . பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் .
  11. திருடா திருடா வில் ராசாத்தி உன்ன என்கிற பாடலை எந்த இசைக் கருவிகளும் இல்லாமல் பாட வைத்தார் ரஹ்மான் . பாடியது அவரது நெருங்கிய நண்பர் சாகுல் அமீது .
  12. ரஹ்மான் இசை அமைத்த டூயட் திரைப்படம் அமெரிக்க இசை நிறுவனத்தால் உலகத்தின் சிறந்த க்ளாசிக்கல் ஆல்பமாக பாராட்டப் பட்டது
  13. கத்ரி கோபால்நாத்  - டூயட் திரைப்படத்திற்காக வாசித்த சாக்ஸபோன் இசை உலகப் புகழ் பெற்றது . முப்பது டியூங்களுக்குப் பின் அதை அவரிடம் இருந்து ஓகே செய்தவர் நம் ஆஸ்கர் ரஹ்மான் .
  14. "பேட்டாரேப்" பாடலின் மூலம் இசையில் ஒரு புது பரிணாமத்தை அறிமுகப் படுத்தினார் ரஹ்மான் . சென்னைத் தமிழும் ஆங்கிலமும் கலந்த பாடலாக பெரும் வெற்றி பெற்றது அந்தப் பாடல் . புதுமையின் பிறப்பிடமாகவே எப்போதும் இருக்கிறார் ரஹ்மான் .
  15. பாம்பே படத்தின் தீம் இசை பல்வேறு நாட்டில் பத்திற்கும் மேற்பட்ட படங்களிலும் , தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கும் உபயோகிக்கப் பட்டது
  16. வெகுநாட்கள் சிறந்த பாடக்கிகான விருதினை பெறாமல் மறுத்து வந்த ஆஷா போன்ஸ்லே ரங்கீலா படத்திற்காக அதை பெற்றார் . ரஹ்மான் இதன் மூலம் ஹிந்தி திரைப்படங்களில் நுழைந்து இன்றளவும் கொடி கட்டிப் பறக்கிறார்
  17.  முத்து, இந்தியன் போன்ற திரைப்படங்களில் பாடல் கேசட்டுகள் ஜப்பானில் ஆறு லட்சம் பிரதிகளுக்கு மேல விற்றுத் தீந்தது .ஜப்பானில் ரஹ்மானுக்கு அத்தனை ரசிகர்கள்
  18. அமெரிக்காவில் படையப்பா படக் குறுந்தகடுகள் விற்றுத் தீர்ந்தது . பின்னர் அங்குள்ள கடைகளில் இப்படி எழுதி வைத்த்திருந்தார்கள் . " படையப்பா படத்தின் பாடல்கள் விற்றுத் தீர்ந்து விட்டது " 
  19. அந்தி மந்தாரை படத்திற்காக சம்பளம் பெற்றுக் கொள்ளவே இல்லை ரஹ்மான் 
  20. எத்தனையோ நல்ல பாடகர்கள்/ பாடகிகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார் ரஹ்மான் . அதில் சின்மயி , ரஹ்மானை கிட்டத் தட்ட கடவுளுக்கு சமமாகப் வைத்திருக்கிறார். ஒரு தெய்வம் தந்த பூவே ... கண்ணில் தேடல் என்ன தாயே ..
  21. சில்லுனு ஒரு காதல் படத்திற்கு இசை அமைத்ததற்கு இன்னும் சம்பளம் பெற்றுக் கொள்ளவே இல்லை ரஹ்மான்
  22. ரஹ்மானின் பேவரிட் லிஸ்ட் : எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர்.., டி.எம்.எஸ். ரஜினி , உணவு வகைகளில் அம்மாவின் மீன் குழம்பு , ரசம் என்று நீள்கிறது 
  23. இளையராஜாவின் " How To Name It " மற்றும் , சிந்து பைரவி ரஹ்மானின் பேவரிட் லிஸ்ட்  
  24. லியோ காபியின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு தன் படத்திற்காக இசை அமைக்குமாறு ரஹ்மானை அழைத்தார் மணிரத்னம்
  25. ரஹ்மானின் சூட்டுகள் இன்றும் சென்னையில் உள்ள சைய்யத் பாவ்கர் என்பரிடம் தான் தைக்கப் படுகிறது. அவ்வளவு பிராண்ட் விசுவாசியாக இருக்கிறார் ரஹ்மான். 

0 comments:

Post a Comment