skip to main |
skip to sidebar
- 20 கோடி ரூபாய் தருவதாகக் கூறிய
ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம்,
‘என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் இளைஞர்கள்... அவர்களை தீய
பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்’
என்றார்.
- சச்சின் வசித்த காலனியின்
வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம் வயதுத் தோழன். இருவரும்தான்
எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல்
செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக!
- எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும்
அதற்குமுன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று
விட்டுத்தான் செல்வார்.
- இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய விமானப் பயிற்சி பெறாத ஒரே ஆள் சச்சின் மட்டும்தான்.
- சச்சின் தேவ் பர்மன் என்கிற இசை அமைப்பாளரின் ஞாபகமாய் இவருக்கு சச்சின் என்று பெயர் வைத்தார் தந்தை
- வேகப் பந்து வீச்சாளராக நினைத்தவரை பேட்டிங் செய்யச் சொல்லி வழி நடத்தியது ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி
- சிறுவயதில்
தனது பயிற்சியாளர் அச்ரேகர் வைக்கும் போட்டிகளில் சச்சின் கடைசி வரை அவுட்
ஆகாமல் பேட்டிங் செய்து , ஸ்டம்ப்பின் மீது வைக்கப் பட்டிருக்கும் 13 ஒரு ரூபாய் நாணயங்களை வென்று, அவைகளை பத்திரமாக சேர்த்து
வைத்திருக்கிறார் ! அதையே தனது மிகப் பெரிய பரிசு என இன்று வரை சொல்லிக்
கொண்டிருக்கிறார் சச்சின்
- பதினான்கு வயதில் மும்பை வண்கேடே மைதானத்தில் பந்து போருக்கிப் போட்டுக் கொண்டிருந்தார் சச்சின் , இன்று அவர் பெயரில் அதே மைதானத்தில் ஒரு அமர்வு ஸ்டான்ட் இருக்கிறது ! ( As Sachin Tendulkar Stand )
- அஞ்சலியின் தாயார் அன்னபெல் நடத்தும் "அப்னாலையா " தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 200 ஏழைக் குழந்தைகளுக்கு உதவுகிறார் சச்சின்
- புற்றுநோய் அமைப்பிற்காக தங்களால் இயன்ற உதவியை செய்யச் சொல்லி ட்விட்டரில் கேட்டுக் கொண்டார் சச்சின் , வந்து குவிந்தது ஒரு கோடி !
- ராஜ் சிங் துங்கர்பூர் - மிகவும்
பொடிப் பையனாக இருக்கிறான் என்றும், சச்சினை அணியில் சேர்க்க வேண்டாம்
என்றும், எல்லோரும் சொன்ன போதும் சச்சினை இந்திய அணியில் முதன் முதலில்
சேர்த்தவரின் பெயர்
- பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு
ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து, அதைப் பந்து வீச்சாளரிடம் கொடுத்து
பந்துவீசச் சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து, பேட்டின் எந்த இடத்தில்
படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த
உத்தியாம்.
- 1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா
விளையாடியது. அப்போது வார்னே ஒரு பேட்டியில், ‘அந்தாளு கனவுல கூட
டார்ச்சர் குடுக்கறார்ப்பா... நான் போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கிற
மாதிரி கனவு வந்து தூக்கத்தைக் கெடுக்குது’ எனக் கூறியிருந்தார்.
- மும்பையிலிருந்து வெளிவரும் ‘மிட் டே’
நாளிதழ், சச்சினின் முதல் பேட்டியைப் பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது
12! பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர், அவருடைய அண்ணன்
அஜித் தெண்டுல்கர்.
- 1995ல் மும்பையில் நடந்தது
சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியைக் காதலித்து, திருமணம்
செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப் பெண். அவருக்கு சச்சினை விட
ஐந்து வயது அதிகம்.
- தன் மனைவி அஞ்சலியை
திருமணத்திற்குமுன் தீவிரமாகக் காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு
பிரபலமாகிவிட்டதால், ஒட்டுத்தாடி, தொப்பி, கண்ணாடி சகிதம் காதலியோடு
பார்க், பீச், தியேட்டர்களில் சுற்றுவாராம்!
- சுதீர்குமார் கௌதம், சச்சின்
தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர்என அழைக்கப்படுபவர். சச்சின்விளையாடுகிற
எல்லா ஆட்டங்களிலும் கலந்து கொள்ளும் இவருக்கு, சச்சினே தன்
போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்து விடுகிறார்.
- ஹாக்கி
வீரர் தியான் சந்த்துக்குப் பிறகு,இந்தியாவில் விளையாட்டுக்காகத்
தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.
- சச்சின்தான் உலகிலேயே அதிக எடை கொண்ட கிரிக்கெட் பேட்டினைப்
பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ! சாதாரண பேட்டின் எடை
ஒரு கிலோதான்!
- சச்சின் பந்து வீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே
பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும், சாப்பிடுவதும் இடது கையில்தான் !
- சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி! சின்ன வயதில் அவருடைய
உடம்பில் பேண்ட் எய்டு எப்போதுமே இடம் பிடித்திருக்குமாம். அவர்
முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேண்ட் எய்டுதான்!
- சச்சின்
கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ மாட்டார்
அவருடைய மனைவி அஞ்சலி! திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே
கடைபிடிக்கிறார்.
- மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு
சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலைவைக்கப்பட்டுள்ளது. இந்த
மியூசியத்தில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்!
- சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்குச்
சென்றோ, டி.வி.யிலோ லைவ்வாகப் பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித்.
ரெக்கார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம்! அவர் பார்த்த ஆட்டங்களில்,
சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை!
1 comments:
யாருக்கும் சச்சினைப் பற்றித் தெரியாத ஒன்றை
நான் சொல்லப்போறேன்.
சச்சினோட அம்மா எங்க நிறுவனத்திலே தான் ஆஃபீஸரா வேலை.
மும்பையிலே இருந்தாங்க. சச்சின் புகழ் பெற்றபின்னே
வி.ஆர்.எஸ். கொடுத்துட்டு விட்டாங்க். அப்படின்னு தான்
எல்லாருமே சொல்றாக.
நான் எந்த நிறுவனத்திலே இருந்தேன் அப்படின்னு
கேட்கறீகளா ?
இன்ஸுரன்சு அப்படின்னா உங்களுக்கு எந்த
நிறுவனம் கண்ணுக்கு முன்னாடி
வந்து நிக்குது ! அது..அதுவே...
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
Post a Comment