Pages

Thursday, April 12, 2012

தல போல வருமா - Ajith 25

 • தன்னம்பிக்கை , பணிவு , சக மக்களிடம் அன்பு , நேர்படப் பேசுவது , தொழிலில் நேர்மை , உலகத்திலேயே மிகவும் பாசம் கொண்ட இனிய ரசிகர்களை பெற்றவர் என்ற வார்த்தைகளால் அஜித்தை அடையாளப் படுத்திவிடலாம் . ஆனால் இதற்கெல்லாம்  மேலாக எல்லா வார்த்தைகளையும் புகழையும் தாண்டிய மனிதாபிமானம் கொண்டவராக மிக உயரத்தில் நிற்கிறார் தல அஜித் !
 • "தல" என்கிற செல்ல மொழி , தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் பறந்து கிடக்கும் அஜித் ரசிகர்களின் உயிர் மொழி. தல போல வருமா ? என்கிற பாடல் இன்றளவும் மாஸ் ஹிட் ! 
 • தனக்குத் தரப்பட்ட "அல்டிமேட் ஸ்டார்" என்கிற பட்டத்தையும் துறந்து ,ரசிகர் மன்றங்களையும் 2011 'இல் கலைத்தார் அஜித் . இல்லாத ஏழைகளுக்கு உதவுவதற்கு என் பெயர் தேவையில்லை , உங்கள் பெயரிலேயே செய்யுங்கள் என்றும் சொன்னார் .
 • " வாழ் , வாழ விடு " என்பது அஜித்தின் அட்டகாச மோட்டோ  
 • கிங் மேக்கர் , என்று மங்காத்தா திரைப்படத்தில் பாராட்டப் பட்டார் .

 • அஜித்தின் மீது அளவில்லாத பேரன்பு கொண்ட ரசிகர்கள் அவர் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய போதும் , அவர் மன்றங்களை கலைத்த போதும் என ஒருபோதும் அஜித்தை விட்டு விலகாமல் எப்போதும் அவர் வழியிலேயே செல்கிறார்கள் . இத்தனை பேரன்பு கொண்ட ரசிகர்கள் இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லை என்றும் சொல்லலாம். 
 •  தன் வீட்டில் ஒரு அல்செட்டியன் நாய் வளர்க்கிறார் அஜித் . செல்லப் பிராணிகள் என்றால் பிரியம் அவருக்கு
 • அருமையாக சமைக்கக் கூடியவர் , ஷூட்டிங் இல்லாத நாட்களில் தானே தன் வீட்டில் இருப்போர்க்கு சமைத்துத் தருகிறார் .தல ஸ்பெஷல் "தல"ப்பாக்கட்டு பிரியாணி.
 • கார் ரேசில் பங்கு பெற்று விபத்தில் சிக்கினார் . முதுகெலும்பு உடைந்தது. கால்கள் மரத்துப் போயின . இன்று மனிதர் சுறுசுறுப்புத் தனியாக படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார் . தல அஜித்தின் நம்பிக்கை , தமிழ்நாட்டில் மெகாஹிட் .
 • 2000  ஆவது ஆண்டு அஜித்திற்கு "கலைமாமணி" படம் வழங்கி சிறப்பித்தது.
 • மார்ச் 17, 1999 at 10.30am. மணிக்கு ஷாலினியை சந்தித்ததாக மறக்காமல் சொல்கிறார் அஜித்.அமர்க்களம் படப் பிடிப்பின் போது அவரையே திருமணம் செய்துகொண்டார். அவரின் பெண் குழந்தை அனோஸ்கா இன்று தல ரசிகர்களின் செல்ல குட்டி.
 • மரக் கன்றுகள் நடுவதிலும் , விழிப்புணர்வு செய்வதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம் .
 • ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தவர் , பின் நாளில் ஒரு பைக் மெக்கானிக்காக மாறினார் .பின்னர் ரேசில் கலந்து கொள்வதற்காக உரிமம் பெற்று அதிலும் கலக்கினார் 
 • அஜித் தான் முதன் முதலில் நடித்த வ்லம்பரம் உஜாலா, அதற்க்கு இசை ஏ.ஆர். ரஹ்மான் . இருவருக்குமே முதல் சினிமா என்ட்ரி அதுதான் .
 • கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் பார்முலா இரண்டு கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.
 • தன் பள்ளி நாட்களில் துப்பாக்கி சுடுதல் , ஏரோ மாடலிங் ,பைக் ரேசிங் போன்ற விளையாட்டுக்களை தன் பொழுது போக்காக வைத்திருந்தார்
 • மோஹினி-மணி என்று தன் தாய் தந்தையார் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதில் ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார் அஜித் . 
 • சக நடிகர் விஜயோடு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு , பின்னர் ஒரு சமயம் இருவரும் இனைந்து அன்பு பாராட்டிக் கொண்டார்கள் "தல-தளபதி" என்கிற மொழி இருவேறு தரப்பு ரசிகர்களையும் ரொம்பவேகவர்ந்தது , ஒருங்கிணைத்தது .
 • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பின் மாஸ் ஒப்பனிங் கொடுத்து கலக்குவது ஒப்பனிங் கிங் தல அஜித்தின் திரைப்படங்கள் மட்டுமே .
 • தமிழ்த் துறையின் பீனிக்ஸ் பறவை என்றால் அது அஜித் மட்டும் தான் . அளவில்லாத தோல்விக்குப் பின்பும். எழுந்து நின்று சாதித்துக் காட்டினார் அஜித். அவ்வளவு தன்னம்பிக்கை .
 • அறிமுக இயக்குனர்களை வளர்த்துவிடுவதில் அஜித்திற்கு நிகர் எவருமில்லை .  தன் படங்கள் தோற்கிற நேரத்திலும் . புதுமுக இயக்குனர்களுக்கு வரிசையாக வாய்ப்பளித்தார் அஜித்.  
 • ஒரு விழாவில் அஜித்தின் பேச்சைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  . எல்லோருக்கும் முன் எழுந்து நின்று தன்னை மறந்து கைதட்டி பாராட்டினார். வேறு எவருக்கும் எழாத சூப்பர் ஸ்டாரே எழுந்து கைதட்டிய ஒரே மனிதர் அஜித் .   
 • ரஜினிகாந்த் அஜித் பற்றிய தன் கருத்தை ஒரு முறை இப்படித் தெரிவித்தார்  " நான் ஒரு அடம் பிடிக்கும் மனிதன் , ஆம் எனக்கு அஜித்தின் இடத்தை பிடிக்க ஆசை .
 • கொடைக்கானல், லண்டன் ,சிவப்பு நிறம் , என்றால் மிகவும் விருப்பம்
 • தனது திருவான்மியூர் இல்லத்தில் ஒரு கேரேஜ் நிறைய புது மாடல் பைக்குகள் , ரிமோட்டில் இயக்கம் சிறிய விமானங்கள், போன்றவைகளை வைத்திருக்கிறார் அஜித்.

0 comments:

Post a Comment