Pages

Saturday, April 14, 2012

மக்கள் தலைவன் இளையதளபதி - Vijay 25

Vijay in Joy Alukkas Advt

Vijay in Velayutham Song
Vijay With his Elder son Sanjay in a song performance
  1. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின் எதார்த்தமான நடிப்பினால் தமிழ்நாட்டை கட்டிப் போட்டிருக்கும் பெருமை நம் இளையதளபதியை சாரும் . குழந்தைகள் , இளைஞர்கள் , பெண்கள் என இவரின் ரசிகர் பட்டாளம் நீள்கிறது. இவரின் ரசிகராக இருப்பவர்கள்  எந்நேரமும் உத்வேகத்துடனும் , புத்துணர்வுடனும் இருக்கிறார்கள். இனி விஜயைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
  2. விஜய்க்கு , வித்யா என்றொரு தங்கை இருந்தார் ,  அவர் ஐந்து வயதிலேயே ரத்தப் புற்றுநோயால்  உயிரிழந்தார் . கடந்த 16 ஆண்டுகளாக தன் தங்கையின் நினைவு தினத்தில் நிறைய ஏழை புற்றுநோய் நோயாளிகளின் மருத்துவ செலவுகளை தானே ஏற்று செய்து கொண்டு வருகிறார் விஜய். இந்த மனித நேயம் தான் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். 
  3.  இவரின் தந்தை எஸ்.எ.சந்திரசேகர் 1974 ஆம் ஆண்டில் விஜய்க்கு பால் வாங்கக் கூட காசில்லாதவராக இருந்திருக்கிறார் . பின்னர் 1976 இல் இணை இயக்குனர் வாய்ப்பு பெற்றார். விஜய் பிறந்ததும் தான் , தான் ஒரு நல்ல நிலையை எட்டியதாக இன்றும் பெட்டிகளில் தெரிவிப்பார் SAC
  4. விஜயின் பேவரிட் டிஷ் - தோசை. தனக்குப் பசிக்கும் போது ஒவ்வொரு முறையும் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் தானே சமையல் அறைக்குள் நுழைந்து தோசை வார்த்துச் சாப்பிடுவார்.
  5. விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர், ஒரு தேர்ந்த பாடகி . விஜயும் ஷோபா அம்மாவும் இனைந்து ஒன்ஸ்மோர் திரைப்படத்திற்காக பாடிய பாடலை இன்றும் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என தெரிவிக்கிறார் நினைவு கூர்கிறார்.
  6. திரைக்கதையில் உண்டான சிறு கருத்து வேறுபாட்டினால் விகரமினின் உன்னை நினைத்து படத்தில் இருந்து விலகினார். பின்னர் அதே லக்ஷ்மி பிலிம் சர்கியுட்டுகாக அதற்கு பதிலாக பகவதி படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜய் . பின்னாளில் ஒரு விழாவில் இருவரும் சந்தித்து நட்பு பாராட்டிக் கொண்டனர். விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரே ஒரு சின்னப் பிரச்சனை இது மட்டும் தான் . மற்றபடி விஜய் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட்.
  7.  விஜயின் தான் நடித்த 53 படங்களிலும் பாசிடிவ் கிளைமாக்ஸ் வரும்படி தான் நடித்திருக்கிறார் . எந்தப்  படத்திலும் கதாநாயகன் இறந்துவிட மாட்டார் ( பிரியமுடன் தவிற ). வேறு எந்த ஒரு நடிகரிடமும் இல்லாத சிறப்பம்சம் இது. 
  8. Vijay in Velayutham Movie
  9. அட்டகாசமான நடனத்திற்கு பெயர் போனவர் விஜய் என்பது நாடறிந்த செய்தி . அப்படி கடினமான பாடல்களுக்கு ஆடிவிட்டு வீட்டிற்கு வந்ததும் வெறும் தரையில் படுத்து உறங்கிவிடுவார். வெறும் தரையில் படுப்பதென்றால் அவ்வளவு இஷ்டம் அவருக்கு .  
  10. ரஜினி கமலுக்குப் பின் இளையராஜாவின் இசையில் பாடியது விஜய் தான்.காதலுக்கு மரியாதை படத்திற்காக ஒ பேபி பாடலுக்காக குரல் கொடுத்தார்.  
  11. புரட்சி தலைவரின் தீவிர விசிறியான விஜய் . அவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை எண்ணமுடியாத தடவை பார்த்திருப்பதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் படங்களின் டி.வி.டி.க்களின் தொகுப்பையே வைத்திருக்கிறார் விஜய். மேலும் எல்லா  பேட்டிகளிலும் தன் வழிகாட்டி தலைவர் எம்.ஜி.ஆர்.என்றே தெரிவிப்பார் விஜய்
  12. படங்களில் புகைப்பதற்காகவே சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டார் விஜய் . பெரும்பாலும் தன் இயக்குனர்களிடம் புகைப் பிடிக்கும் சீன்களை வைக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவார். நிஜ வாழ்க்கையிலோ , படங்களிலோ புகைப் பிடிப்பது விஜய்க்குப் பிடிக்காத ஒன்று
  13.  விஜயின் அப்பாவிற்கு ஜக்கி வாசுதேவின் கொள்கைகள் பிடித்துப் போய் விஜயையும் யோகா கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் விஜய் அதை மறுத்துவிட்டார்.
  14. விஜய் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இல்லை. ஒவ்வொரு dec 25 கிறிஸ்மசுக்கும் தன் வீட்டில் இருப்பார் .தன் குடும்பத்தினரோடு நேரம் களித்து மகிழ்வார்
  15. விஜய் 2010 இல் தன் ரசிகர் மன்றங்களை விஜய் ரசிகர் மன்றங்களாக மாற்றினார் . அதன் மூலம் தொடர்ந்து அவரது ரசிகர்களும் அவரும் மக்கள் சேவை , பொதுப்பணி , ஏழை மாணவர்கள் , மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் .
  16. விஜய் தன்னுடைய தொலைபேசி எண்ணை விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியப் படுத்தியிருக்கிறார். அவரின் நெட்வொர்க் ஏர்டெல். எப்போதும் தன் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்பிலேயே இருக்கிறார் விஜய்   
  17. தன்னுடன் நடித்த கதாநாயகிகளில் மிகவும் பிடித்தவராக சிம்ரனைக் குறிப்பிடுவார் விஜய் . மேலும் அவரோடு நடனம் ஆடுவது மிகவும் சவாலானது என்றும் தெரிவிப்பார் விஜய்.
  18. மூன்று விளம்பரப் படங்களில் நடித்தார் விஜய் , கொக்க-கோலா, ஜே ஆலூக்காஸ் , டாட்டா டோகோமோ. இவற்றில் காக்க கோலா விளம்பரத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்த பின் தான் கத்ரீனா கைப்'க்கு பட வாய்ப்புகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
  19.  சக நடிகர் அஜித்துடன் படங்களில் போட்டி இருந்தாலும் , நிஜ வாழ்வில் இருவரும் சிறந்த நண்பர்கள் , இருவர் வீட்டிற்க்கும் இருவரும் போய் வருவது வழக்கம் .மேலும் இவரின் பிள்ளைகள் ஒரே பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. "தல-தளபதி" என்கிற தாரக மந்திரமான நட்பிற்கு சொந்தக்காரர்கள் - அஜித்தும் விஜயும் 
  20.  ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்தும் விஜயும் சேர்ந்து நடித்திருப்பார்கள் . நட்பிற்கு சிறந்த உதாரணமாய் புகழப் பட்டது அந்தப் படம்
  21. தான் பாடிய 25  பாடல்களில்  மூன்று பாடல்கள் சூர்யாவிர்காக பாடியிருக்கிறார் விஜய் . ஒரு பாடல் நடிகர் விக்னேஷிர்காக . மற்ற நடிகர்களுக்காக பாட வரும் அழைப்பினை விஜய் ஒரு போதும் மறுப்பதில்லை.
  22. இவ்வளவு பெரிய நடிகரான பின்பும் தன் கல்லூரி நண்பர்களை மறக்காமல் இருக்கிறார் விஜய் . தன் படங்களான பத்ரி , நிலாவே வா , மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் அவரோடு இருக்கும் அனைத்து நண்பர்களும் விஜயின் கல்லூரி நண்பர்கள். அவர்கள்  அனைவருக்கும் உதவியது விஜய் , இன்று அவர்கள் அத்தனை பெரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
  23. விஜயின் மாமா எஸ்.என்.சுரேந்தர் தான் மைக் மோகனுக்காக நிறைய படங்களில் பின்னணிக்குரல் கொடுத்தவர் .
  24. விஜயை பாடகராக அறிமுகப் படுத்தியது தேனிசைத் தென்றல் தேவா. விஜயின் பதினைந்து படங்களில் தேவாவின் இசை தென்றலாக வருடியிருக்கிறது . எப்படியும் விஜயை ஒரு பாடலாவது பாட வைத்து விடுவார் தேவா . அவரின் விசிறி என்றே சொல்லலாம் .
  25. விஜய் தானே புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக தன் மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகள் செய்தார். மேலும் ஹோசூரில் ஒரு இலவச பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் விஜய் . இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 32  ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவை தானே ஏற்று செய்து கொண்டிருக்கிறார் விஜய். இதை அவர் வெளியிலும் சொல்லி கொண்டதே இல்லை
  26. இலங்கை தமிழரான தன் மனைவி சங்கீதாவின் வருகைக்க்ப் பின் விஜய் நடித்த ஐந்து படங்களும் பெரிய ஹிட்டானது .சங்கீதாவின் வரவை தன்வாழ்க்கையில் கிடைத்த அதிர்ஷ்டம் என்றே ஒவ்வொரு பேட்டியிலும் தெரிவிப்பார் விஜய் .

Friday, April 13, 2012

ஆஸ்க்கர் தமிழன் - Rahman 25

  1. ஒன்பது வயதில் தன் தந்தையை இழந்த திலிப் குமார் , கஷ்ட ஜீவனத்தில் தன் தந்தையின் இசைக் கருவிகளை விற்றார்.பின்னர் காசிம் பாயால் உதவப்பட்டு அல்லா ரக்கா ரஹ்மானாக மாறினார் AR RAHMAN 
  2. ஒரு கீபோர்டு கூட வாங்க வசதி இல்லாமல் இருந்தஅதே ரஹ்மான் தான் பின்னர் இந்தியாவிற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் கொடுத்தார் . வாழ்க்கை, மனிதர்களை புழுதியில் கிடத்தினாலும் மன உறுதி படைத்தவர்கள் இயற்கைக்கே சவால் விட்டு எழுந்து நிற்பார்கள் . ரஹ்மானும் தன் விதிக்கு சவால்விட்டு வென்ற மனிதர்.
  3. தன் இளம் வயது இசை நாட்களை எம்.எஸ்.வி, இளையராஜா, குன்னக்குடி, ஜாகிர் உசேன் , போன்ற இசை மாமேதைகளுடன்  முதலீடு செய்தார் .பின்னாளில் அதற்கான புகழ் மகசூளையும் அறுவடை செய்தார்
  4. எண்ணிலடங்கா விருதுகளுக்குச் சொந்தக்காரர் ரஹ்மான் . 103   விருதுகளைப் குவித்திருக்கிறார் அதில் இரண்டு ஆஸ்கர்களும் , நான்கு தேசிய விருதுகளும்   , இருபத்தி எட்டு பிலிம் பேர்களும் அடக்கம்
  5. பிரபல ஆஸ்திரேலிய இயக்குனர் இப்படித் தெரிவித்ததார் :                                ரஹ்மான் தொடாத இசை நுணுக்கமே இல்லை , அவரின் இசையில் மனிதநேயமும், புத்துணர்ச்சியும் நிறைந்திருக்கும் , எனக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் " 
  6. அவருடைய முதல் திரைப்படமான ரோஜா படத்தின் பாடல்  , டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த பத்து பாடல்களுக்குள் ஒன்றாக தரவரிசையில் இடம் பெற்றது 
  7. ரான் பேர் என்கிற இசை இயக்குனர் ரஹ்மானை இப்படித் தெரிவித்தார் : உலகில் இருக்கும் சிறந்த இசயமைப்பலர்களுள் ரஹ்மானும் ஒருவர்
  8. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாக வதந்தி கிளம்பியது.மிகவும் மனமுடைந்து போனார் ரஹ்மான்.அதே வேகத்தோடு வந்தே மாதரம் ஆல்பம் ஒன்றை தன் குரலில் பாடி தன் தேசப் பற்றை உலகத்திற்கே பறை சாற்றினார் ரஹ்மான்
  9. இசையில் ஆர்வமுள்ள 25  குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் தன் இசைப்பள்ளியின் மூலம் உதவுகிறார் ரஹ்மான் .
  10.  கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் தன் வழக்கமான இசை அமைப்பு ஸ்டைலில் இருந்து வேறுபட்டு ஒரு முழுநீள கிராமியத் திரைப்படங்களுக்கும் தன்னால் பெரும் சிறப்பு சேர்க்கமுடியும் என நிரூபித்தார் ரஹ்மான் . பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் .
  11. திருடா திருடா வில் ராசாத்தி உன்ன என்கிற பாடலை எந்த இசைக் கருவிகளும் இல்லாமல் பாட வைத்தார் ரஹ்மான் . பாடியது அவரது நெருங்கிய நண்பர் சாகுல் அமீது .
  12. ரஹ்மான் இசை அமைத்த டூயட் திரைப்படம் அமெரிக்க இசை நிறுவனத்தால் உலகத்தின் சிறந்த க்ளாசிக்கல் ஆல்பமாக பாராட்டப் பட்டது
  13. கத்ரி கோபால்நாத்  - டூயட் திரைப்படத்திற்காக வாசித்த சாக்ஸபோன் இசை உலகப் புகழ் பெற்றது . முப்பது டியூங்களுக்குப் பின் அதை அவரிடம் இருந்து ஓகே செய்தவர் நம் ஆஸ்கர் ரஹ்மான் .
  14. "பேட்டாரேப்" பாடலின் மூலம் இசையில் ஒரு புது பரிணாமத்தை அறிமுகப் படுத்தினார் ரஹ்மான் . சென்னைத் தமிழும் ஆங்கிலமும் கலந்த பாடலாக பெரும் வெற்றி பெற்றது அந்தப் பாடல் . புதுமையின் பிறப்பிடமாகவே எப்போதும் இருக்கிறார் ரஹ்மான் .
  15. பாம்பே படத்தின் தீம் இசை பல்வேறு நாட்டில் பத்திற்கும் மேற்பட்ட படங்களிலும் , தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கும் உபயோகிக்கப் பட்டது
  16. வெகுநாட்கள் சிறந்த பாடக்கிகான விருதினை பெறாமல் மறுத்து வந்த ஆஷா போன்ஸ்லே ரங்கீலா படத்திற்காக அதை பெற்றார் . ரஹ்மான் இதன் மூலம் ஹிந்தி திரைப்படங்களில் நுழைந்து இன்றளவும் கொடி கட்டிப் பறக்கிறார்
  17.  முத்து, இந்தியன் போன்ற திரைப்படங்களில் பாடல் கேசட்டுகள் ஜப்பானில் ஆறு லட்சம் பிரதிகளுக்கு மேல விற்றுத் தீந்தது .ஜப்பானில் ரஹ்மானுக்கு அத்தனை ரசிகர்கள்
  18. அமெரிக்காவில் படையப்பா படக் குறுந்தகடுகள் விற்றுத் தீர்ந்தது . பின்னர் அங்குள்ள கடைகளில் இப்படி எழுதி வைத்த்திருந்தார்கள் . " படையப்பா படத்தின் பாடல்கள் விற்றுத் தீர்ந்து விட்டது " 
  19. அந்தி மந்தாரை படத்திற்காக சம்பளம் பெற்றுக் கொள்ளவே இல்லை ரஹ்மான் 
  20. எத்தனையோ நல்ல பாடகர்கள்/ பாடகிகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார் ரஹ்மான் . அதில் சின்மயி , ரஹ்மானை கிட்டத் தட்ட கடவுளுக்கு சமமாகப் வைத்திருக்கிறார். ஒரு தெய்வம் தந்த பூவே ... கண்ணில் தேடல் என்ன தாயே ..
  21. சில்லுனு ஒரு காதல் படத்திற்கு இசை அமைத்ததற்கு இன்னும் சம்பளம் பெற்றுக் கொள்ளவே இல்லை ரஹ்மான்
  22. ரஹ்மானின் பேவரிட் லிஸ்ட் : எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர்.., டி.எம்.எஸ். ரஜினி , உணவு வகைகளில் அம்மாவின் மீன் குழம்பு , ரசம் என்று நீள்கிறது 
  23. இளையராஜாவின் " How To Name It " மற்றும் , சிந்து பைரவி ரஹ்மானின் பேவரிட் லிஸ்ட்  
  24. லியோ காபியின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு தன் படத்திற்காக இசை அமைக்குமாறு ரஹ்மானை அழைத்தார் மணிரத்னம்
  25. ரஹ்மானின் சூட்டுகள் இன்றும் சென்னையில் உள்ள சைய்யத் பாவ்கர் என்பரிடம் தான் தைக்கப் படுகிறது. அவ்வளவு பிராண்ட் விசுவாசியாக இருக்கிறார் ரஹ்மான். 

Thursday, April 12, 2012

தல போல வருமா - Ajith 25

  • தன்னம்பிக்கை , பணிவு , சக மக்களிடம் அன்பு , நேர்படப் பேசுவது , தொழிலில் நேர்மை , உலகத்திலேயே மிகவும் பாசம் கொண்ட இனிய ரசிகர்களை பெற்றவர் என்ற வார்த்தைகளால் அஜித்தை அடையாளப் படுத்திவிடலாம் . ஆனால் இதற்கெல்லாம்  மேலாக எல்லா வார்த்தைகளையும் புகழையும் தாண்டிய மனிதாபிமானம் கொண்டவராக மிக உயரத்தில் நிற்கிறார் தல அஜித் !
  • "தல" என்கிற செல்ல மொழி , தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் பறந்து கிடக்கும் அஜித் ரசிகர்களின் உயிர் மொழி. தல போல வருமா ? என்கிற பாடல் இன்றளவும் மாஸ் ஹிட் ! 
  • தனக்குத் தரப்பட்ட "அல்டிமேட் ஸ்டார்" என்கிற பட்டத்தையும் துறந்து ,ரசிகர் மன்றங்களையும் 2011 'இல் கலைத்தார் அஜித் . இல்லாத ஏழைகளுக்கு உதவுவதற்கு என் பெயர் தேவையில்லை , உங்கள் பெயரிலேயே செய்யுங்கள் என்றும் சொன்னார் .
  • " வாழ் , வாழ விடு " என்பது அஜித்தின் அட்டகாச மோட்டோ  
  • கிங் மேக்கர் , என்று மங்காத்தா திரைப்படத்தில் பாராட்டப் பட்டார் .

  • அஜித்தின் மீது அளவில்லாத பேரன்பு கொண்ட ரசிகர்கள் அவர் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய போதும் , அவர் மன்றங்களை கலைத்த போதும் என ஒருபோதும் அஜித்தை விட்டு விலகாமல் எப்போதும் அவர் வழியிலேயே செல்கிறார்கள் . இத்தனை பேரன்பு கொண்ட ரசிகர்கள் இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லை என்றும் சொல்லலாம். 
  •  தன் வீட்டில் ஒரு அல்செட்டியன் நாய் வளர்க்கிறார் அஜித் . செல்லப் பிராணிகள் என்றால் பிரியம் அவருக்கு
  • அருமையாக சமைக்கக் கூடியவர் , ஷூட்டிங் இல்லாத நாட்களில் தானே தன் வீட்டில் இருப்போர்க்கு சமைத்துத் தருகிறார் .தல ஸ்பெஷல் "தல"ப்பாக்கட்டு பிரியாணி.
  • கார் ரேசில் பங்கு பெற்று விபத்தில் சிக்கினார் . முதுகெலும்பு உடைந்தது. கால்கள் மரத்துப் போயின . இன்று மனிதர் சுறுசுறுப்புத் தனியாக படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார் . தல அஜித்தின் நம்பிக்கை , தமிழ்நாட்டில் மெகாஹிட் .
  • 2000  ஆவது ஆண்டு அஜித்திற்கு "கலைமாமணி" படம் வழங்கி சிறப்பித்தது.
  • மார்ச் 17, 1999 at 10.30am. மணிக்கு ஷாலினியை சந்தித்ததாக மறக்காமல் சொல்கிறார் அஜித்.அமர்க்களம் படப் பிடிப்பின் போது அவரையே திருமணம் செய்துகொண்டார். அவரின் பெண் குழந்தை அனோஸ்கா இன்று தல ரசிகர்களின் செல்ல குட்டி.
  • மரக் கன்றுகள் நடுவதிலும் , விழிப்புணர்வு செய்வதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம் .
  • ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தவர் , பின் நாளில் ஒரு பைக் மெக்கானிக்காக மாறினார் .பின்னர் ரேசில் கலந்து கொள்வதற்காக உரிமம் பெற்று அதிலும் கலக்கினார் 
  • அஜித் தான் முதன் முதலில் நடித்த வ்லம்பரம் உஜாலா, அதற்க்கு இசை ஏ.ஆர். ரஹ்மான் . இருவருக்குமே முதல் சினிமா என்ட்ரி அதுதான் .
  • கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் பார்முலா இரண்டு கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.
  • தன் பள்ளி நாட்களில் துப்பாக்கி சுடுதல் , ஏரோ மாடலிங் ,பைக் ரேசிங் போன்ற விளையாட்டுக்களை தன் பொழுது போக்காக வைத்திருந்தார்
  • மோஹினி-மணி என்று தன் தாய் தந்தையார் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதில் ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார் அஜித் . 
  • சக நடிகர் விஜயோடு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு , பின்னர் ஒரு சமயம் இருவரும் இனைந்து அன்பு பாராட்டிக் கொண்டார்கள் "தல-தளபதி" என்கிற மொழி இருவேறு தரப்பு ரசிகர்களையும் ரொம்பவேகவர்ந்தது , ஒருங்கிணைத்தது .
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பின் மாஸ் ஒப்பனிங் கொடுத்து கலக்குவது ஒப்பனிங் கிங் தல அஜித்தின் திரைப்படங்கள் மட்டுமே .
  • தமிழ்த் துறையின் பீனிக்ஸ் பறவை என்றால் அது அஜித் மட்டும் தான் . அளவில்லாத தோல்விக்குப் பின்பும். எழுந்து நின்று சாதித்துக் காட்டினார் அஜித். அவ்வளவு தன்னம்பிக்கை .
  • அறிமுக இயக்குனர்களை வளர்த்துவிடுவதில் அஜித்திற்கு நிகர் எவருமில்லை .  தன் படங்கள் தோற்கிற நேரத்திலும் . புதுமுக இயக்குனர்களுக்கு வரிசையாக வாய்ப்பளித்தார் அஜித்.  
  • ஒரு விழாவில் அஜித்தின் பேச்சைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  . எல்லோருக்கும் முன் எழுந்து நின்று தன்னை மறந்து கைதட்டி பாராட்டினார். வேறு எவருக்கும் எழாத சூப்பர் ஸ்டாரே எழுந்து கைதட்டிய ஒரே மனிதர் அஜித் .   
  • ரஜினிகாந்த் அஜித் பற்றிய தன் கருத்தை ஒரு முறை இப்படித் தெரிவித்தார்  " நான் ஒரு அடம் பிடிக்கும் மனிதன் , ஆம் எனக்கு அஜித்தின் இடத்தை பிடிக்க ஆசை .
  • கொடைக்கானல், லண்டன் ,சிவப்பு நிறம் , என்றால் மிகவும் விருப்பம்
  • தனது திருவான்மியூர் இல்லத்தில் ஒரு கேரேஜ் நிறைய புது மாடல் பைக்குகள் , ரிமோட்டில் இயக்கம் சிறிய விமானங்கள், போன்றவைகளை வைத்திருக்கிறார் அஜித்.

Tuesday, April 10, 2012

கமல் என்கிற மாமனிதர்

  • நடிகர் , தயாரிப்பாளர் , திரைக்கதை எழுத்தாளர்  ,  இயக்குனர் , பின்னணிப் பாடகர்,  வசனகர்த்தா , நடன இயக்குனர் , எழுத்தாளர், கவிஞர் , சண்டை , பாடலாசிரியர் , மேக்கப் ,  என சினிமா துறையின் அனைத்து துறைகளிலும் ஜொலித்தவர் , ஜொலிக்கிறவர் , ஜொலிக்கப் போகிறவர் கமலஹாசன் மட்டுமே.
  • கமலின் தந்தை தன்னுடன் சிறையில் இருந்த யாக்கோப் ஹாசன் என்பவற்றின் நினைவாக கமல்ஹாசன் என்று பெயர் வைத்தார். 
  • தன்னுடைய ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய கமல் அதன் மூலம் எண்ணற்ற ஏழைக் குழந்தைகளுக்கும் , பிள்ளைகளுக்கும் உதவி வருகிறார் . மேலும் ரத்த தானம் , கண்தானம்,  உடல் தானம் , போன்றவை கமல் ரசிகர்களால் மட்டுமே மிகுந்த மனிதாபிமானத்தோடு பெருமளவில் செய்யபடுகிறது ! 
  • டோர்ரொண்டோ விமான நிலையத்தில் ஒரு முறை முஸ்லிம் பெயர் வைத்திருப்பதற்காக அனுமதி மறுக்கப் பட்டார் கமல் .
  • இந்திய சினிமாவில் இவர் ஆற்றும் பெரும் பங்கை சிறப்பித்து 1990  ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ" பட்டம் வழங்கப்பட்டது 



  •  சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் கமலுக்கு கவுரவ "டாக்டர்" பட்டம் கொடுத்து தன்னை கவுரவித்துக் கொண்டது .

  • சினிமாத் துறையில் 50  ஆண்டுகளைக் கடந்து வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்கும் கலை தாகம் தணியாத கலைஞனாய் மின்னுகிறார் கமல்.
  • என்றும் எப்போதும் எல்லோரிடத்தும் பாசமாக இருப்பவர் கமல் . நம்பியார் , நாகேஷ் , சிவாஜி , எம்.ஜி.ஆர்,ஜெமினி கணேசன் , மனோரமா, போன்றவர்களின் பேரன்பை பெற்ற ஒரே கலைஞன் கமல் .
  • தன் முதல்  படத்திற்காக தேசிய விருது வாங்கினார் - களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசன் (1959 )
  • இந்தியாவின் பிக்காசோ என்று அழைக்கப் படும் எம்.எப்.ஹுசைன் அவர்கள் , கமலின் படைப்புத் திறனைக் கண்டு வியப்பதாகத் தெரிவித்திருந்தார் .  
  • உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் புற்று நோய்க்கான விழிப்புணர்வு விளம்பரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார் 

  • கமல் நடித்த நாயகன் (1987) டைம்ஸ் பத்திரிக்கையால் மிகச் சிறந்த படைப்பென்று பாராட்டப்பட்டது
  • தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்து திரை உலகத்தின் அத்துனை நாயகர்களையும் அண்ணாந்து பார்க்க வைத்தார் கலைமாமணி கமல்ஹாசன் .
  •  அன்னை வேளாங்கன்னி என்னும் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணி செய்தார்.
  • பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்திய கமலஹாசன் சிவாஜி கணேசனின் கலை வாரிசு என்று ஏற்கப்படத் துவங்கியதற்கு பதினாறு வயதினிலே திரைப்படம் பிள்ளையார் சுழியிட்டது. 

  • உலகத் திரைப்பட வரலாறுகளிலே  முதன் முறை குள்ளத் தோற்றம் கொண்டவராக ஒரு நடிகர் நடித்திருப்பது அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக கமல்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்த படம் 1989 ஆம் ஆண்டில் 36 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
  •  
  • ஆஸ்காருக்கு பரிந்துறிக்கப் பட்ட இந்திய படங்களில் அதிகமான முறை (7 முறை) பரிந்துரைக்கப் பட்ட படங்கள் கமல்ஹாசனுடைய திரைப்படங்கள் மட்டுமே.
  • இந்திய மொழிகளுள் ஒன்பது மொழிகள் சரளமாகப் பேசக் கூடியவர். தமிழ் , தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,பெங்காலி,மற்றும் ஹிந்தி படங்களில் நடித்திருக்கும் ஒரே இந்திய நடிகர் .
  • தேவர் மகன் - இந்தியத் தேசிய திரைப்பட விருதினை 1993 ஆம் ஆண்டு பெற்ற இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
  • ஹேராம் இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது 2000பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • ஜாக்கி சானின் சண்டைகளைக் பார்த்து அதை பின்பற்ற நினைத்தேன் அதன் விளைவாக 32 முறை கை உடைந்து போனது என்று ஒரு விழாவில் ஜாக்கி முன்  சொன்னார் கமல்ஹாசன்.
  • எலிசபெத் ராணியின் சென்னை வந்த பொது மறுத்த நாயகத்தின் தொடக்க விழா நடைபெற்றது. போதுமான நிதி பற்றாக்குறையால் படம் கிடப்பில் கிடக்கிறது.கூடிய விரைவில் அதை வெற்றிப் படமாக வெளியிடுவார் கமல்.
  • இந்தியன் - 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
  • 50 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட தசாவதாரம் 276 கோடி ரூபாய் வசூலித்து மாபெறும் சாதனை படைத்தது 
  • 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குருதிப்புனல் திரைப்படம்
  • பதினெட்டு பிலிம் பேர்  விருதுகள் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல் 
  • இளையராஜாவுடன் தீராத காதலில் இருப்பவர் . இவர்கள் சேர்ந்து உருவாக்கிய இசை உலகப் புகழ் பெற்றவை 

Monday, April 9, 2012

சச்சின் டெண்டுல்கர் - Sachin 25

    • 20 கோடி ரூபாய் தருவதாகக் கூறிய ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம், ‘என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் இளைஞர்கள்... அவர்களை தீய பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்’ என்றார்.    
    • சச்சின் வசித்த காலனியின் வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம் வயதுத் தோழன். இருவரும்தான் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல் செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக!
    • எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும் அதற்குமுன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று விட்டுத்தான் செல்வார்.                                                             
    • இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய விமானப் பயிற்சி பெறாத ஒரே ஆள் சச்சின் மட்டும்தான். 
    •  சச்சின் தேவ் பர்மன் என்கிற இசை அமைப்பாளரின் ஞாபகமாய் இவருக்கு சச்சின் என்று பெயர் வைத்தார் தந்தை 
    •  வேகப் பந்து வீச்சாளராக நினைத்தவரை பேட்டிங் செய்யச் சொல்லி வழி நடத்தியது ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி  
    •  சிறுவயதில் தனது பயிற்சியாளர் அச்ரேகர் வைக்கும் போட்டிகளில் சச்சின் கடைசி வரை அவுட் ஆகாமல் பேட்டிங் செய்து , ஸ்டம்ப்பின் மீது வைக்கப் பட்டிருக்கும் 13 ஒரு ரூபாய் நாணயங்களை வென்று, அவைகளை பத்திரமாக சேர்த்து வைத்திருக்கிறார் ! அதையே தனது மிகப் பெரிய பரிசு என இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார் சச்சின் 
    • பதினான்கு வயதில் மும்பை வண்கேடே மைதானத்தில் பந்து போருக்கிப் போட்டுக் கொண்டிருந்தார் சச்சின் , இன்று அவர் பெயரில் அதே மைதானத்தில் ஒரு அமர்வு ஸ்டான்ட் இருக்கிறது ! ( As Sachin Tendulkar Stand )
    • அஞ்சலியின் தாயார் அன்னபெல் நடத்தும் "அப்னாலையா " தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 200  ஏழைக் குழந்தைகளுக்கு உதவுகிறார் சச்சின்


    • புற்றுநோய் அமைப்பிற்காக தங்களால் இயன்ற உதவியை செய்யச் சொல்லி ட்விட்டரில் கேட்டுக் கொண்டார் சச்சின் , வந்து குவிந்தது ஒரு கோடி !


    • ராஜ்  சிங் துங்கர்பூர் - மிகவும் பொடிப் பையனாக இருக்கிறான் என்றும், சச்சினை அணியில் சேர்க்க வேண்டாம் என்றும், எல்லோரும் சொன்ன போதும் சச்சினை இந்திய அணியில் முதன் முதலில் சேர்த்தவரின் பெயர் 
    • பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து, அதைப் பந்து வீச்சாளரிடம் கொடுத்து பந்துவீசச் சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து, பேட்டின் எந்த இடத்தில் படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த உத்தியாம்.
    • 1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா விளையாடியது. அப்போது வார்னே ஒரு பேட்டியில், ‘அந்தாளு கனவுல கூட டார்ச்சர் குடுக்கறார்ப்பா... நான் போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கிற மாதிரி கனவு வந்து தூக்கத்தைக் கெடுக்குது’ எனக் கூறியிருந்தார்.
     
    • மும்பையிலிருந்து வெளிவரும் ‘மிட் டே’ நாளிதழ், சச்சினின் முதல் பேட்டியைப் பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது 12! பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர், அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர்.

      • 1995ல் மும்பையில் நடந்தது சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப் பெண். அவருக்கு சச்சினை விட ஐந்து வயது அதிகம்.

      • தன் மனைவி அஞ்சலியை திருமணத்திற்குமுன் தீவிரமாகக் காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்டதால், ஒட்டுத்தாடி, தொப்பி, கண்ணாடி சகிதம் காதலியோடு பார்க், பீச், தியேட்டர்களில் சுற்றுவாராம்!
    • சுதீர்குமார் கௌதம், சச்சின் தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர்என அழைக்கப்படுபவர். சச்சின்விளையாடுகிற எல்லா ஆட்டங்களிலும் கலந்து கொள்ளும் இவருக்கு, சச்சினே தன் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்து விடுகிறார்.    
    • ஹாக்கி வீரர் தியான் சந்த்துக்குப் பிறகு,இந்தியாவில் விளையாட்டுக்காகத் தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.
    • சச்சின்தான் உலகிலேயே அதிக எடை கொண்ட கிரிக்கெட் பேட்டினைப் பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ! சாதாரண பேட்டின் எடை ஒரு கிலோதான்!




    • சச்சின் பந்து வீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும், சாப்பிடுவதும் இடது கையில்தான் !
    • சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி! சின்ன வயதில் அவருடைய உடம்பில் பேண்ட் எய்டு எப்போதுமே இடம் பிடித்திருக்குமாம். அவர் முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேண்ட் எய்டுதான்!
    • சச்சின் கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ மாட்டார் அவருடைய மனைவி அஞ்சலி! திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே கடைபிடிக்கிறார்.
    •  மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலைவைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்!
    • சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்குச் சென்றோ, டி.வி.யிலோ லைவ்வாகப் பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித். ரெக்கார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம்! அவர் பார்த்த ஆட்டங்களில், சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை!