skip to main |
skip to sidebar
- தொழில்நுட்ப உலகின் மாமேதை ஸ்டீவ் ஜாப்ஸ், பிறந்ததுமே அவரை ஒரு மெக்கானிக்'கிற்கு தத்துக் கொடுத்துவிட்டனர் . அந்த வளர்ப்பு பெற்றோர்கள் வைத்த பெயர் தான் ஸ்டீவென் பால் ஜாப்ஸ் ( Steven Paul Jobs )
- பள்ளிப் படிப்பின் போது இவரது சேஷ்டைகள் மிகவும் பிரபலமாவை : ஒரு முறை,
ஆசிரியை அமரும் இடத்திற்கடியில் ஒரு சிறிய வெடி குண்டை வைத்துவிட்டார். அதுவும் வெடித்து ஆசிரியைக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்ப்பட்டது.
- சரியாக தன் வீட்டுப் பாடத்தை செய்யாத ஸ்டீவை அவரின் ஆசிரியை லஞ்சம்
கொடுத்து படிக்க வைத்தார்.தினமும் சரியாக வீட்டுப் பாடம் செய்து வந்தால்
லாலிப்பாப்புகள் தரப்படும் என்று தெரிவித்ததும் சரியான நேரத்திற்கு செய்து
லாலிப்பாப்புகளைத் தட்டிச் செல்வார்.
- "பட்டினியால் வாடும் குழந்தைகள்" என்று ஒரு நாளிதழில் வெளிவந்த கட்டுரையை பார்த்தார். உடனே
அதை எடுத்துச் சென்று, தான் செல்லும் தேவாலயத்தின் தந்தையை சந்தித்தார்.
அங்கு அவரிடம் அந்தக் கட்டுரையைக் காட்டி, "ஆண்டவருக்கு எல்லாம் தெரியும்
அல்லவா ? இதுவெல்லாம் அவருக்குத் தெரியாதா ?? என்று கேட்டார். தந்தை
அதற்கு, ஸ்டீவ் உனக்கு இது புரியவில்லை , இதெல்லாம் விதி என்றார். உடனே
அப்படிப்பட்ட ஆண்டவரை நான் இனி வணங்கப் போவதில்லை என்று கூறி அதன் பின் தன்
வாழ்நாளில் அந்த தேவாலயத்தின் பக்கமே செல்லவில்லை ஸ்டீவ்
- இளம் வயதில் தன் வளர்ப்புப் பெற்றோரின் கண்டிப்பையும் மீறி தான் காதலித்த
கிரைசான் பென்னனுடன் சென்று ஒரு தனி வீட்டில் வசித்தார். அங்கு ஓவியம்
வரைவதிலும் , கவிதை எழுதுவதிலும், கிட்டார் வாசிப்பதிலும் நேரத்தை
செலவிட்டார்.
- பிரான்சிஸ் மூர் லேப் எழுதிய "இந்த சிறிய உலகிற்கான நல்லுணவு" என்ற நூலைப் படித்ததற்குப் பின் தீவிர சைவமாக மாறிவிட்டார் . ஆப்பிள் கேரட்
மற்றும் ஸ்டார்ச் இல்லாத காய் கறிகளை மட்டுமே உணவாக உட்கொண்டார்.
- நீம் கரோலி பாபா என்பவர் ஸ்டீவின் இந்திய குரு. ஒருமுறை ஆன்மீகத்தில்
நாட்டம் கொண்டு வேலை நிமித்தமாக இந்தியா வந்தபோது இவரை தரிசித்து அவரின்
கொள்கைகளில் ஈர்க்கப் பட்டார் .
- பின்னாளில் தன் நிஜப் பெற்றோர்கள் தங்களது அறிவாளி மகனைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அதை மறுத்துவிட்டார் ஸ்டீவ்
- ஆப்பிள் மூன்று (Apple-3) கணினிக்கு தன் மகளின் பெயரான லிசா என்ற பெயரையே சூட்டினார் ஸ்டீவ்.
- ஜென் குருக்களின் மேலும் புத்த மதத்தின் மேல் பெரும் ஈர்ப்பு கொண்டவர்
ஸ்டீவ். தன் திருமணத்தை கூட ஜென் துறவியின் முன்னிலையில் தான் நடத்தினார்.
- ஒரு கடையில் குமாஸ்தாவாகவும், கார்கள் விற்ப்பவராகவும், வீடு விற்கும்
நிறுவனத்தின் பிரதிநிதியாகவும் , வேலை செய்திருக்கிறார்.
- கல்லூரியில் சில நாட்கள் படித்தார். எழுத்துக்களை வடிவமைக்கும் கேளிக்ராபி (Caligraphy) என்கிற படிப்பையும் படித்துத் தேர்ந்தார் .
- புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீவ் அதை இயற்கை உணவு
முறையின் மூலமே குணப் படுத்திவிடலாம் என்று நம்பி இருந்தார். ஆனால் நிலைமை
கைமீறி கடைசியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விட்டது . அப்போதே
அவர் நீண்ட நாள் உயிரோடு இருக்க முடியாது என்கிற செய்தியை டாக்டர்கள்
தெரிவித்து விட்டனர். அதைப் போலவே ஜாப்சும் சென்று சேர்ந்து விட்டார்.
- வளர்ப்பு பெற்றோரான பாலும் க்லாரவும் தான் ஆயிரம் சதவிகிதம் தன்னுடைய நிஜப் பெற்றோர்கள் என்று ஜாப்ஸ் சொல்லிக்கொண்டே இருப்பார் (in his biography he writes Paul and Clara Jobs “were my parents 1,000%.”)
- சைவ உணவுகளை உண்பதற்காகவும், பிராணிகளின் மீதான காதலுக்காகவும் பீட்டா (PETA, People for Ethical Treatment of Animals ) அமைப்பு ஜாப்சை பாராட்டியது
- சிறு வயதில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஹரே கிருஷ்ணா கோவிலில்
கொடுக்கப் படும் நல்ல உணவினை சாப்பிடுவதற்காக வெகு தூரம் நடந்தே செல்வார்.
வறுமையின் பிடியில் இருந்த போது கொக்கக்கோலா புட்டிகளை சேகரித்துக் கொண்டு
போய் கடைகளில் கொடுத்தது அதன் மூலம் கிடைக்கிற பணத்தை சேமிப்பார்.
- எல்.எஸ்.டி.( LSD , (d-lysergic acid diethylamide which is a mood-changing chemical) என்கிற,மனநிலையை மாற்றக் கூடிய வேதிப்பொருளை உபயோகித்ததை, தான் செய்த நல்ல காரியங்களுள் ஒன்று எனத் தெயவித்தார் ஜாப்ஸ்.
- எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஜாப்ஸ் ஹெவ்லெட் பேக்கட் (HP) நிறுவனத்தின்
பகுதி நேர ஊழியராக சேர்ந்தார். அதன் வாசலில் போய் நின்று கொண்டு அவரை
உள்ளே அனுமதிக்குமாறு நிர்பந்தித்தார். அதன் காவலாளி அவரை
அனுமதிக்கவில்லை.சடசடவென உள்ளே நுழைந்த ஜாப்ஸ் அடார்நியிடம் சென்று தனக்கு
வேலை கொடுக்கவில்லை என்றால் தான் அந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை எனத்
தெரிவித்தார்.அதன் படியே தன புத்திசாலித் தனத்திற்காக வேலை வாங்கிக்
காட்டினார் ஜாப்ஸ்.
- ஆப்பிள் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்னும் ஆரம்பித்த பின்னும் சரி , ஜாப்ஸ்
சரியாக குளிக்கவோ தன்னை சுத்தமாகவோ வைத்துக் கொள்ள மாட்டார் என்று
எல்லோரும் அவரை திட்டித் தீர்ப்பார்கள். ஜாப்ஸ் என்றுமே எவரையுமே கண்டு
கொண்டதில்லை.
- ஊதா நிற ஜீன்சும், கருப்பு நிற சட்டையும் அணிவதில் அலாதியான சுகம் ஜாப்சுக்கு.
- பெப்சியின் தலைமை அதிகாரியை ஆப்பிள் நிறுவனத்திற்காக வேலை செய்ய அழைத்துக்
கொண்டார். மேலும் " நீ வாழ்நாள் முழுதும் சர்க்கரை கலந்த கலர் தண்ணீரையே
விற்றுக் கொண்டிருக்க விரும்புகிறாயா அல்லது மக்களின் வாழ்க்கைக்கு
உபயோகமானவைகளை விற்க விரும்புகிறாயா?" என்று அவரைப் பார்த்து கேட்டார்
ஜாப்ஸ்.
- அவருடைய டிஸ்னி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு $48 மில்லியன் டாலர். ஆனால்
தன்னுடைய ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருப்பதற்காக தான்
பெற்றுக் கொண்ட சம்பளம் ஒரே ஒரு டாலர் மட்டும் !
- தற்போதைய நிலவரப் படி உலகின் 136'வது பணக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ்
- ஆப்பிள் உயர் ரக தொலைபேசி வெளியீட்டின் போதும் சரி , சிறுவயதில் தான் ப்ளூ
பாக்ஸ் என்கிற கருவியை கண்டு பிடித்த போதும் சரி . விளையாட்டாக
யாருக்காவது அலைபேசியில் அழைத்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஜாப்ஸ்.
(உ.தா., ஒருமுறை பக்கத்து நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு அழைப்பு விடுத்து
ஏமாற்றினாராம் )
- தன் பன்னிரெண்டாவது வயதில் கணினியை கண்டுபிடித்த மாமேதை , ஐ-பேட், மேக்
கணினி , ஆப்பிள் தொலைபேசி, போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகளின்
தந்தையாகவும் விளங்கிய இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதனை
தத்துக் கொடுத்தமைக்கு அவரின் நிஜப் பெற்றோர்கள் எத்தனை நாள் கண்ணீர் விட்டழுதிருப்பார்களோ என்னவோ ,
உலகம் இவரைப் பிரிந்த போது சக போட்டியாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. எல்லா
முன்னணி நிறுவன முதன்மை செயலாளர்களும் ஜாப்ஸின் மரணத்திற்குப் பின் அவரைப்
புகழ்ந்து பேசினார்கள்.
6 comments:
அருமையான பகிர்வு... நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு ...இதுவரை நான் படித்திராத கேட்டிராத ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய குறிப்புகள் . !!!
superb nice information :)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...
ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் வாழ்க்கை சரிதத்தை முழுமையாகப் படித்ததற்கு
ஒரு தூண்டு கோலாக அமைந்தது இந்த பதிவு.
உங்களுக்கும் உங்களது வலைக்கு வருவதற்கு
உதவி செய்த பரிதி ஒளி (திரு சூரிய பிரகாஷ்)
அவர்கட்கும் எனது நன்றி.
ஈட்டம் இவறி இசை வேண்டா மாந்தர் தம்
தோற்றம் நிலக்குப் பொறை
என வள்ளுவர் உரைப்பார்.
ஈட்டவும் செய்தார், தான் ஈட்டியவற்றால்
வாடியோரின் கண்கள் துடைக்கவும் செய்தார்.
இன்னல் வந்தபொழுது அதை எதிர்த்து நின்றார்.
தன் சிரம் உயர்த்தி நின்றார்.
வையத்துள் வாழ்வாங்க்கு வாழ்ந்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் .
அவர் வந்த ஜாப்ஸ் இன்னும்
முடியவில்லை.
அடுத்த ஜாப்ஸ் எப்போது எங்கே பிறப்பார்
என எதிர்பார்க்கிறோம் .
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
அருமையான பகிர்வு....... வாழ்த்துக்கள்
Post a Comment